பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மந்திரியோ நமக்கு எதிர் கட்சியின் சிரத்தை கொண்டவர் களாகிய ஆங்கிலோ இந்திய அதிகாரி கூட்டத்திற்குத் தலைவராகவும், பிரமாணிகராகவுமிருக்கின்ருர். இந்த ஆங்கிலோ இந்திய அதிகாரிகளின் கூட்ட முழுவதும் உங்களுக்கு விரோதமாயிருக்கும் பொழுது இந்தியா மந்திரி அந்தக் கூட்டத்தாரை யெல்லாம் திரஸ்காரம் செய்து விட்டு, உங்களுடைய உரிமைகளைக் கொடுத்து விடுவார் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவருக்கு அவ்விதம் செய்ய வல்லமை இருக்கின்றதா? அவர் அவ்விதம் செய்யும் பட்சத்தில் உடனே வெளியே போய் விடச் செய்ய மாட்டார்களா? ஆகவே நீங்கள் பிரிட்டிஷ் எலெக்டர்கள் (வோட் கொடுக்கும் பாத்தியத்தை உடையோர்) கூட்டத்தை உங்கள் பக்கம் திருப்பவேண்டும் என்று ஏற்படுகிறது. எனவே நீங்கள் இங்கிலாந்திலேயே ஒட் கொடுக்கும் பாத்தியத்தை உடைய ஜனங்களேயெல்லாம் உங்கள் பக்கம் திருப்ப முயன்று, அதன் பிறகு லிபரல் கட்சி பார்லிமெண்டில் அதிகாரம் பெற்று. அதுவும் இந்தியாவுக்கு நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணங் கொண்டதாக விருந்து இதற்கப்பால் மிஸ்டர் மார்லியைப்போல நல்லவ ராகிய இந்தியா மந்திரி . நியமிக்கப்பட்டு, இதுவெல்லாம் நிறைவேறி முடிந்த பிறகு உங்களுக்குப் பழைய வழிகளால் உங்களுக்கு நன்மை சம்பவிக்கக் கூடும். எத்தனை அஸ்ம்பாவிதம் பார்த்தீர்களா? இதை புதிய கட்சியார் நன்முக அறிந்துக்கொண்டு விட்டார்கள். பிரிட்டிஷ் நாட்டிலுள்ள எலெக்டர்களின் கூட்டத்தாரெல்லாம் உங்கள் பக்கத்திற்குத் திரும்ப வேண்டுமானல் அது பிரசங்கங்களாகவே நடக்கவேண்டும். அவர்களுடைய அனுகூலங்களையேனும் தி ர வி ய லாபத்தையேனும் உங்களால் சிறிதேனும் குறைக்க முடியாது. ஓர் தர்ம பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு அதற்காக தனது சொந்த