பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் னுரை ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்து ஐந்தாம் ஆண்டு, செப்டம்பர் மாதம் பதினேரும் தேதி, சென்னை ஜெனரல் பாட்டர்ஸ் ரோடிலே உள்ள காங்கிரஸ் மாளிகை யிலே 'பாரதிதினம் கொண்டாடப் பெற்றது. இப்பொழுது சத்தியமூர்த்தி பவனம் இருக்கிறதே! அந்த இடமேதான்! அப்போது இந்த மாதிரி நவீனக் கட்டிடம் இருக்கவில்லை. வேறு ஒரு கட்டிடம் இருந்தது. ஆனல் இடம் அதுவே. அப்போது நான் "சுதந்திரச் சங்கு' என்ற பத்திரிகை யின் உதவியாசிரியனுகப் பணிபுரிந்தேன். பத்திரிகை ஆசிரியர் என்னை அழைத்தார்; கூட்டத்துக்குப் போய் வருமாறு கூறினர். கூட்ட நடவடிக்கைகளைக் குறித்து வருமாறு சொன்னர். நான் சென்றேன். மாலை மணி ஆறு இருக்கும். கூட்டம் தொடங்க வில்லை. காங்கிரஸ் மாளிகையில் எவருமே இல்லை, சிறிது நேரம் சென்றது. ஒருவர்பின் ஒருவராகச் சிலர் வந்தனர்.