பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

III (Tenancy question) op 5 60 u su Ab 6 » Ap எடுத்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் நமக்கு ஏதேனும் குறை ஏற்பட்டபோது நாம் சபைகள் கூடுவதும் விண்ணப்பம் கொடுப்பதும் பத்திரிகைகளில் முறையிடுவதுமே வழக்க மாக வைத்துக்கொண்டிருக்கிருேம். ஆனலிவற்றின் பேரில் ராஜாங்கத்தார் செய்யும் தீர்மானம் தெரிந்த உடனே மறுபடியும் முற்றிலும் மெளனமடைந்து அத் தீர் மானத்தை வணக்கத்துடன் ஒப்புக்கொண்டு விடுவதென்று வைத்துக்கொண்டோம். இதுவே கவர்ன்மென்ட்டாரின் அனுபவம். அதிகாரிகள் இவ்விதமாக மிஸ்டர் மார்லிக்கு எழுதியிருக்கிருர்கள் என்று நான் நம்புகிறேன். பெங்காளப் பிரிவு விஷயத்திலும்கூட அவர்கள் பின்வருமாறு மிஸ்டர் மார்லிக்கு எழுதியிருக்காலம் என்று நான் உத்தேசிக் கிறேன். "தாம் இன்னும் சிறிது காலம் சும்மா இருந்து விட்டால் எல்லாம் சரியாய் போய்விடும். தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் கூக்குரலெல்லாம் சில கலகப் பிரியர்களால் ஏற்பட்டிருக்கின்றது. சிறிது காலம் கழிந்த பிறகு இந்தக் குழப்பம் தானே அடங்கிவிடும். ஜனங்களும் பெங்காள பிரிவை அங்கீகரித்துக்கொண்டுவிடுவார்கள். இந்தியா ஜனங்களின் இயற்கையை தாம் அறிவதைக் காட்டிலும் நாங்கள் நன்முய் அறிவோம். நாங்கள் அவர்களின் மீது அரசாட்சி செய்திருக்கிருேம். இன்னும் எவ்வளவோ காலம் அரசாட்சி செய்யப் போகிருேம். எங்களுடைய அனுபவத்தின் பேரில் நாங்கள் தமக்குத் தெரிவித்துக் கொள்வதென்னவென்ருல் தாம் இந்த ஜனங்களின் கூக் குரலுக்கும்-கலவரத்திற்கும் சிறிதேனும் மனம் தாழ்ந்து விடக்கூடாது." இவ்வாறு மிஸ்டர் மார்லியின் மந்திரி களாகிய ஆங்கிலோ இந்தியர்கள் அவருக்குச் சொல்லியிருக் கிருர்கள். அதின் பேரில் அவர் என்ன நினைப்பார்.? ராஜாங்க அனுபோகமுடையவர்கள் இவ்விதம் ஒருங்கு