பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 போகும் பட்சத்தில் அதற்கும் ஆயத்தமாயிருக்கும்பொருட் டாக இருதிறத்தாரும் லைனியங்களைத் திரட்டிக்கொண்டி ருந்தார்கள். இதுதான் ராஜதந்திரமுறை. இது போலவே உங்களுடைய விருப்பம் மறுக்கப்படும் பட்சத்தில் நீங்கள் சண்டை செய்யத் தயாராயிருக்கிறீர்களா? நீங்கள் தயாரா யிருக்கும் பட்சத்தில் உங்களுடைய விருப்பங்கள் மறுக்கப் பட மாட்டாவென்றே நிச்சயம் கொண்டிருங்கள். இதற்கு நீங்கள் தயாராயில்லாத பட்சத்தில் உங்களுடைய விருப்பம் சதா காலம் மறுக்கப்பட்டே தீருமென்பது சர்வ நிச்சயம். நம்மிடத்தில் ஆயுதங்கள் இல்லை. தற்காலத்தில் ஆயுதம் வேண்டிய அவசியமும் இல்லை. சாதாரன ஆயுதங்களைக் காட்டிலும் பலமான தந்திரக் கருவி ஒன்று நம்மிடத்திலிருக்கிறது. அது ப ஹி ஷ் கார ம். ஒரு விஷயத்தை நாம் தெளிவாகக் கண்டு கொண்டு விட்டோம். அதாவது ஒரு பி டி ய ள வு கொண்ட ஆங்கிலேயர்களால் நடத்தப்பெறும் இந்த ராஜாங்க மானது, நம்முடைய ஸஹாயத்திலேயே ந - ந் து வருகிறது. நாமெல்லோரும் தாழ்ந்த உத்தியோகங்களி லிருக்கிருேம். முழுவதும் நம்முடைய உதவியாலேயே நடக் கிறது. நமக்கிருக்கும் ஐக்கிய சக்தியை நாம் அறிந்து கொண்டு இப்பொழுது அவர்கள் கையிலிருப்பதை நாம் பாத்தியத்தைக் கூறி நாமே ஆளத் தலைப்படாதவண்ணம் அவர்கள் நம்மை அறிவின்மையிலிருத்தி வைக்கப் பார்க் கிருர்கள். முழு அதிகாரமும் நம்முடைய கையிலிருக்க வேண்டுமென்பதுதான் இப்பொழுது குறி. எனது வீட்டி விருந்து ஒரு அன்னியன் மட்டும் வெளியேறி விட்டால் போதாது. வீட்டுத் திறவுகோல் என் கையிலிருக்க வேண்டும். நாம் குமஸ்தாக்களாகி எந்நாளும் குமஸ்தாக் களாகவே யிருக்கவேண்டும் என்ற விருப்பம் நமக்கில்லை. இப்பொழுது நாம் அன்னிய ராஜாங்கத்தார் கையில் 8