பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 அனைத்தையும் நீங்களே யோசித்துப் பாருங்கள். எங்கள் போதனையை நீங்கள் அங்கீகாரம் செய்துகொள்ளும் பகத்தில், நமக்கெல்லாம் நற்காலம் பிறந்து விடுமென்று நாங்கள் உறுதியாக நம்புகிருேம். இதுதான் புதிய கட்சியின் போதனை. காங்கிரஸிலே எங்களுடைய கருத்துக்கள் முற்றிலும் அங்கீகரித்துக் கொள்ளப்பட வில்லை, என்பது மெய்யாக இருக்கலாம். நெடுங்காலத்துத் தப்பெண்ணங்கள் சீக்கிரம் மடிந்து போவதில்லை. இரு கட்சியாருக்கும் காங்கிரஸை சேதப்படுத்த வேண்டு மென்ற விருப்பமில்லாதபடியால் ஒருவித சமாதானம் செய்துகொண்டோம். எங்களுடைய கொள்கைகள் சிறிது தூரந்தான் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன என்ற போதிலும், இந்த மட்டில் எங்களுக்குதி திருப்திதான். இதல்ை நாம் இதனை முற்றிலும் ஒப்புக்கொண்டு விட்டோமென்று அர்த்தமில்லை. அடுத்த வருஷம் நாங்கள் இன்னும் ஒரு அடி. முன்னெடுத்து வைக்கக் கூடும். எனவே, இன்னும் கருத்துகளனைத்தும் காங்கிரஸிலே சம்மதமாய் விடும். எங்களுக்குப் பின்வரும் சந்ததியார் எங்களை நிதானக் கட்சியார் என்று சொல்லுவார்கள். ஒரு தேசத்தார் அபிவிருத்தியடையும் வழி இதுவேயாம். ஜனங்களின் அபீஷ்டம் நாளுக்கு நாள் முற்பட்டு வரும் வழி இதுவேயாகும். இப்போது நடந்து வரும் காலவ்ரை யினின்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய பாடம் இதுவேயாகும். இதுவே அபிவிருத்தியின் பாட ம். உங்களுக்கு நீங்களே இயன்ற மட்டும் உதவி செய்து கொள்ளவேண்டும் என்பதே இதன் நோக்கம். உங்க ளுக்கு உண்மையாகவே இப்பாடத்தின் பலன் விளங்கி இவ்விவகாரங்கள் நியாயமென்பதாக உங்கள் மனதில் அழுந்தி விடுமாயின் இப்போது உங்களுக்குக் கஷ்ட முண்டாக்கும் அந்நிய ராஜாங்கத்திலிருந்து நீங்கள்