பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடியும் மின்னலும் சூரத் காங்கிரசுக்குப்பிறகு இந்திய அரசியல் வானிலே கருமேகங்கள் சூழ்ந்தன. அம் மேகங்கள் இடித்து முழங்கின. மின்னல்கள் பளிச் பளிச் சென்று வெட்டின. ஆட்சி பீடத்தில் வீற்றிருந்த அந்நிய அதிகார வர்க்கம் வெறிபிடித்துத் தலைவிரித்து ஆடியது. திலகர் கட்சியை ஆதரித்த பத்திரிகைகள் மீது சீறிப் பாய்ந்தது வெள்ளே ஆட்சி; பத்திரிகை ஆசிரியர்கள்மீது பாணம் தொடுத்தது: சிறையில் தள்ளியது. வங்காளத்திலே திலகர் கட்சியின் குரலாக ஒலித்தது 'வந்தே மாதரம் பத்திரிகை. அப் பத்திரிகையில் வெளி யிடப்பட்ட கட்டுரை ஒன்றின் பொருட்டுக் கைது செய்யப் பட்டார் விபின சந்திர பாலர். கட்டுரை எழுதியவர் யாரென்று வெளியிடுமாறு விபின சந்திர பாலரைக் கேட்டார் அவரை விசாரித்த மாஜ்ஸ்டிரேட். கட்டுரை எழுதியவரின் பெயர் பத்திரிகையில் வெளியிடப் படவில்லை. அக்கட்டுரை வரைந்தவர் தம் பெயரை வெளி யிடாதிருக்குமாறு பத்திரிகை ஆசிரியரைக் கேட்டுக் கொண் டிருந்தார். அவர் பெயரை வெளியிடுவதில்லை என்று உறுதியளித்திருந்தார் ஆசிரியர். எனவே, அக்கட்டுரையாளர் எவர் என்பதை வெளியிட மறுத்தார் விபின சந்திர பாலர், அதுதான்