பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 விசாரணை செய்யப் புகுந்த rணத்திலேயே தமக்கு ஏதேனும் ஆபத்து வரக்கூடு மென்று அஞ்சினர்கள் போலும்!. • * * * * "பொது ஜனங்கள் நடுக்கத்தில் இருப்பார்கள் என்று நான் சென்னையில் வைத்து நம்பியிருந்தேன். பெரிய மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலரைத் தவிர மற்ற சாமானிய ஜனங்கள் அதிக அச்ச நிலையில் இருக்கவில்லை. கலகம் நடந்து அதிகாரிகளின் பராக்கிரமச் செயல்கள் நடந்து முடிந்த காலத்தில் பீதி அதிகப் பட்டிருந்ததாகவே தெரிகிறது. இரண்டு மூன்று தினங் களுக்கு தெருக்களிலே மனிதர் நடமாட்டமில்லாமல் ஊர் "மரணபுரம் போல் இருந்ததாம். ஆனால், அந்த பீதி இப்பொழுது தெளிந்து போய்விட்டது. ஜனங்கள் வழக்கம் போலவே தமது காரியாதிகளில் பிரவேசித்து நடத்திவருகிரு.ர்கள். தெருக்களிலே போலீஸ் கோஷங் களைக் கா ண வி ல் லை. பாளையங்கோட்டையிலிருக்கும் பியூனிடிவ் போலீஸார் மட்டும் அங்கங்கே இடையிடையில் சுற்றி வருவதாகத் தெரிகிறது. "திங்கட்கிழமை காலை பாளையங்கோட்டை ஜெபி லுக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்குள்ள அதிகாரிகளின் அனுமதியின் பேரில் உள்ளே சென்று ரீ சிதம்பரம்பிள்ளை, பூரி சுப்பிரமணிய சிவம் இருவரையும் கண்டு பேசினேன். பூரீ சிதம்பரம்பிள்ளையை முன்பு நான் தூத்துக்குடியிலே அவருடைய அரிய பிரசங்கங்களை ஆயிரக்கணக்கான ஜனங்கள் கேட்டுப் புகழ்ச்சி கூறிக்கொண்டிருந்த காலத் தில் பார்த்தபோது அவருடைய முகம் எவ்வளவு பிரசன்ன மாகவும், தேஜஸ்டனும் விளங்கியதோ அதே மாதிரி யிலேயே இப்பொழுதும் இருக்கக் கண்டேன், உடனே எனக்கு,