பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 விஷயத்தில் முற்பட்டு நின்று பாடு படுவார்கள் என்று நம்புகிருேம்.” தூத்துக்குடி சுதேசி கப்பல் கம்பெனியை எப்பாடு பட்டேனும் நன்கு நடத்தவேண்டும் என்பது பாரதியாரின் விருப்பம். அதன் பொருட்டு அவர் அரும்பாடு பட்டார். இடைவிடாமல் 'இந்தியா’ பத்திரிகையில் எழுதினர். மக்களுக்கு வேண்டுதல் விடுத்தார். வ. உ. இ. மேற் கொண்ட செயலை விட்டுவிடலாகாது என்று எழுதினர். 'துரத்துக்குடியிலுள்ள ஸ்டீமர் கம்பெனிக்கு பிதா ஸ்தானம் வகித்தவராகிய ரீமான் சிதம்பரம் பின்ஜா நமதிடையிலிருந்து, அவருடைய பரோபகாரமாகிய முயற்சி செய்வதற்கு இடமில்லாமல் விலக்கப் பெற்று விட்டனர். அவருடைய ஆசை மகளாகிய மேற்படி கம்பெனியை இக் காலத்தில் வைத்து சம்ரக்ஷணை செய் வேண்டுவது பாரதவாசியாகிய ஒவ்வொவருக்கும் தலைப் பொறுப்பாகும். "அவர் இல்லாத சமயத்தில் அக் கம்பெனிக்கு ஏதேனும் சஞ்சலம் ஏற்பட்டு விடும் பகத்தில் நமது ஜாதிய கெளர வத்துக்கு அதைப் போன்ற குறைவு வேறு கிடையாது. சென்னப் பட்டணத்து உள்ளுர்காரர் இந்த விஷயத்தில் மிகவும் சிரத்தை குறைவுடன் இருப்பதுபற்றி கல்கத்தா வந்தே மாதரம் பத்திரிகை பரிகசித்துப் பழிகூறுகின்றது. து த் து க்கு டி தேசாபிமானிகளின் ஊக்கத்தையும் பெங்காளத்துப் பணத்தையுமே முக்கிய ஆதாரங்களாகக் கொண்டு துரத்துக்குடி கம்பெனி நடை பெறுகின்றது. சென்னப் பட்டணத்தில் செல்வம் நிதானஸ்தர் வசமே அகப்பட்டிருக்கிறது. அவர்களுடைய தேச பக்தியோ வாய் மட்டில் நிற்பதே யல்லாமல் பணம் கேட்டவுடனே பின் வாங்கும் இயற்கையுடையது. தூத்துக்குடி பிரதேசத்