பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 திலும் நிதானஸ்தர்களால் வெறியரென்று பழிக்கப்படும் உண்மையான தேச பக்தர்கள் இருப்பதால் அவர்கள் தன்னலம் கருதாமல் தேச நலத்தின் பொருட்டு சகலத் திலும் தத்தம் செய்து பாடு படுகின்ருர்கள். பகிஷ்கார பயித்தியமில்லாமல் லார்டு மின்டோ சொல்கிறபடி சாது கதேசியம் கைப் பற்றியுள்ளதாகச் சொல்லும் சென்னை நிதானஸ்தர்கள் மேலே வந்தே மாதரம் பத்திரிகை எழுதி யிருக்கும் வசை வார்த்தை உண்மையா இல்லையா என்பது பற்றி யோசனை புரிவார்கள் என்று நம்புகிருேம்." (இந்தியா-தலையங்கம்-சூன் 13, 1908) 'தீபாவளிப் பண்டிகை தினம் ஆங்காங்குள்ள தேச பக்தி சிரோன்மணிகள் சிரத்தை எடுத்துக் கொண்டு பணம் வசூலித்து வருகிருர்கள். அதை நமது பாரத நாட்டின் பெருமையான ஸ்வதேசி கப்பல் கம்பெனிக்கு உதவி செய்வார்களேயானல் அது சிறந்த தர்மமாவதுடன் ஜாதீய இயக்கத்திற்கு ஒர் பெரிய ஆதரவாயும், மேலான உத்சாக காரணமாயும் இருக்கும். நமது நண்பர் மேலையூர் பிரம்மபுரீ ராமய்யர் என்பவர் நமது 'இந்தியா" பத்திரிகையில் சென்ற வாரத்தில் பதிப்பிருந்த விண்ணப் பத்தைப் படித்தவுடன் தம்மாலியன்ற அளவு ரூபாய் ஐந்து மணியார்டர் செய்து விட்டார். இப்படி தேசாபிமானிகள் தங்கள் கையிலிருந்து கொடுத்து விடுவதுடன் தீபாவளி தினத்தில் வசூலித்துக் கொடுத்தனுப்புவது, செளகரிய மானது. இந்த முயற்சியின் செய்தி எல்லாரும் அறியத் தக்க பிரசித்தமாய் தெரிய இது ஒரு நல்ல வழி' (இந்தியா-அக்டோபர் 30, 1909) கதேசி இயக்கத்தில் பங்கு கொண்ட தேச பக்தர்களை எவராவது இகழ்ந்து பேசி விட்டால் பாரதி அதைப் பொறுக்க மாட்டார்; சீறிப் பாய்வார்.