பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கிருர். ஒரு போலீஸ்காரருக்கு மனு தர்ம சாஸ்திரத்தில் இவ்வளவு தூரம் ஆழமான ஞானமிருப்பது பற்றி சந்தோஷ மடைகிருேம். அதிவர்ணசிரமியாக சந்நியாச நிலை பெற்ற மக்களுக்கு, வர்ணசிரம பேதம் கிடையாது என்று இந்தப் போலீஸ்காரருக்குத் தெரியாது போலும், போலீஸ் மனு நீதியில் மேற்படி விஷயம் சொல்லப் படவில்லை என்று தோன்றுகிறது. பிராமண ஜன்மம் எடுத்துப் போலீஸ் உடை தரித்துக் கொண்டு ஒர் மிலேச்ச அதிகாரியின் கீழ் கை கட்டிக்கொண்டு காவல் செய்வது சாஸ்திரோக்தம் தானே? இதைப் பற்றி இந்த வேங்கட வரதாச்சாரியார் என்ற போலீஸ்காரர் படித்த மனுதர்ம சாஸ்திரத்திலே என்ன சொல்லியிருக்கிறது என்று அறிய விரும்புகிருேம்." (இந்தியா, 1908 ஜூன் 13)