பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II "ஓ! தெரியுமே! நந்தன் சரித்திரம் பாடியிருக்கிருரே! அவர்தானே' என்பர். "நந்தன் சரித்திரம் பாடியவர் கோபாலகிருஷ்ண பாரதி. அவரை நான் சொல்லவில்லை. தேசியப்பாடல் பல பாடியிருக்கிருரே! அவரைச் சொல்கிறேன்" என்று நான் பதில் கூறுவேன். இம்மாதிரி அறியாமைக் களஞ்சியங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க எண்ணினேன். பாரதியின் உண்மையான வாழ்க்கை வரலாறு ஒன்று வெளியிடக் கருதினேன். பாரதியின் வாழ்க்கையை எழுதுவது எப்படி? பாரதியை அறிந்தவரை நெருங்கி இதுபற்றிக் கேட்க எண்ணினேன். இப்போது பாரதி புகழ் நாடு முழுவதும் பரவி விட்டது. "பாரதியைத் தெரியும் என்று சொல்லிக் கொள்வோர் பலர் தோன்றி விட்டனர். பாரதியின் உறவினரி என்று சொல்லிக் கொள்வோரும் பலர் ஆகி விட்டனர். ஆதிலே பெருமை! ஆனல் நான் கூறுவது நாற்பது ஆண்டுகள் முன்பு, அப்போது பாரதியின் உறவினர் என்று சொல்லிக் கொண்டவர் சிலரே. அவருள் ஒருவர் சென்னையில் வசித்தார்: சேப்பாக்கத்திலே உள்ள அரசினர் ஆபீசிலே உத்தியோகம் வகித்து வந்தார். அவர் பெயர் சங்கரன். ஆவரைக் கண்டு பேசினேன். 'லோகோபகாரி" என்ற பத்திரிகையின் ஆசிரியராக விளங்கினர் நெல்லையப்பபிள்ளை. அவர் பாரதியை நன்கு அறிந்தவர். "தம்பி!” என்று பாரதியாரால் அழைக்கப்