பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131 வேலை செய்யாது நின்று விடுவோமென்றும் பிரதிநிதிகள் மூலமாய் போதிய அவகாசத்துடன் ஏற்கனவே நோட்டீஸ் மூலமாய் தெரிவித்திருந்தும் மேலதிகாரிகள் கவனிக்க வில்லை. ஐரோப்பிய, யுரேஷிய, ஆங்கிலோ இந்திய ஸ்டேஷன் மாஸ்டர்கள் போலவே, இந்திய ஸ்டேஷன் மாஸ்டர்களும், உதவி ஸ்டேஷன் மாஸ்டர்களும் வேலை செய்தபோதிலும் இந்திய வேலைக்காரர்களுக்கு சம்பளம் மட்டும் ஐரோப்பியர் வகையருக்களுடைய சம்பளங் களில் நாலில் ஒரு பாகம்கூட கிடையாது என்ற விஷயத்தை மேலதிகாரிகளுடைய க வ ன த் தி ற் கு க் கொண்டுவந்த பொன்கூர் ஸ்டேஷன் மாஸ்டர் உடனே வேலையை விட்டு நீக்கப்பட்டதோடு, அ வ ரு க் கு ச் சேரவேண்டிய ஒரு மாதச் சம்பளமும் கால்மணி நேரத் தில் கொடுத்துவிடப்பட்டது. உண்மையை எடுத்துச் சொன்ன குற்றத்திற்காக நிரபராதியான பொன்கூர் ஸ்டேஷன் மாஸ்டர் இப்படி அக்கிரமமாய் தண்டிக்கப் பட்டிராவிட்டால் இவ்விதமாய் ஒரே கட்டுப்பாடான வேலை நிறுத்தம்கூட ஏற்பட்டிராது. கூடிய சீக்கிரத்தில் ஏதாவது ஏற்பாடு செய்யப்படாவிட்டால் கம்பெனிக்கு மிகுந்த நஷ்டம் வந்துவிடும் என நினைக்கிருேம். தென்னிந்திய ரயில்வே கம்பெனியார் இந்தச் சமயத்தில் ஈஸ்ட் இந்தியா கம்பெனியாருக்கு உதவி செய்ய முற்பட்டி ருக்கிரு.ர்கள். இவர்களன்றி மற்றும் இந்தியாவிலுள்ள கம்பெனியாரும் இவ்வாறே உதவி செய்வார்கள் என்றே தோன்றுகிறது. மற்றக் கம்பெனியார் ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கு ஆள் சேர்த்து அனுப்புவதிலிருந்து மேற்படி, கம்பெனியாட்களுக்கு கடைசிவரை உ த் தியோ க ம் கிடைப்பதற்கு வழியில்லாமல் போய்விடும். இந்த மாதிரி விஷயங்களில் மற்றக் கம்பெனி வேலையாட்கள் அற்ப ஆசைப்பட்டுப் போவது அத்தனை யுக்தமாக