பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13☾ மாட்டாது. இதேமாதிரி விபத்து வேறு ஒரு கம்பெனி வேலையாட்களுக்கும் ஏற்படலாம். ஆதலால் மற்றக் கம்பெனி வேலையாட்கள் எல்லா விஷயங்களையும் நன்ருக ஆராய்ச்சி புரிந்து காரியத்தில் தலையிடுவார்கள் என்று நம்புகிருேம்." (இந்தியா - 28 - 7 - 1906) வேலைநிறுத்தத்தின் தொடக்க நாட்களிலே இவ்வாறு எழுதினர் பாரதியார். வேலை நிறுத்தம் பிசுபிசுத்துப் போகும் என்று வெள்ளைக் கம்பெனிகள் மனப்பால் குடித்தன; அவர்தம் எண்ணம் மண்ணுயிற்று. வேலை நிறுத்தம் நீடித்தது. வேலைநிறுத்தம் செய்த ஈஸ்ட் இந்தியா தொழிலாளர்கள் உறுதியுடன் நின்ருர்கள். அவர்தம் உறுதி கண்டு ம கி ழ் ந் தா ர் பாரதியார். தொழிலாளர்தம் உறுதியையும் கட்டுப்பாட்டையும் பாராட்டினர்; பின் வருமாறு எழுதினர்: "தொழில் நிறுத்தம்போன்ற விஷயங்களில் நெடுங்கால அநுபவமும் தேர்ச்சியும் பெற்ற மேல் நாட்டார்சுட "ரயில்வே தொழில் நிறுத்தம் முதலியவற்றிலே இரண்டு மூன்று வாரங்களுக்குமேல் நிலைத்து நிற்பது மிகவும் கஷ்டமாகும். அதை உத்தேசிக்கும்போது, ஈ. ஸ் ட் இண்டியா ரெயில்வே வேலேயாட்கள் இத்தனை நாள் தீரத்தன்மையுடன் நியாயம் நடக்கும்வரை வணங்க மாட்டோம் என்று நிற்பது மிகவும் சந்தோஷத்திற்கு இடமாயிருக்கிறது. ஜமால்பூரில் 14,000 பேர் வேலை நிறுத்தி விட்டார்கள் என்று சிலதினங்கள் முன்பு ஒரு தந்தி கிடைத்தது. இன்னும் அநேக ஸ்டேஷன்களி லுள்ள வேலையாட்கள் எல்லாம் உடனே ராஜிநாமா கொடுத்து விடுவதாக மேலதிகாரிகளுக்குத் தந்தி அடித் திருக்கிருர்கள். ஒருங்கு கூடி வேலை செய்யும் வல்லமை