பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 மொத்தமாகத் தொழில் நிறுத்தி விடுவது வழக்கம். அது போலவே நமது தொழிலாளிகளும் செய்யத் தலைப்பட்டு விட்டனர். என்ன செய்வார்கள் பாவம்? "விவசாயத் தொழிலைப் பரப்புவதற்கு கவர்ன் மெண்டார் போதுமான சகாயம் செய்து கொடுப்பதில்லை. அரிசி, கோதுமை முதலிய உணவு தானியங்கள் பெருமடங் காக ஏற்றுமதி செய்யப்பட்டு உள்நாட்டுக்குள்ளே கஷ்டம் வந்து விடாமல் தடுக்க கவர்ன்மெண்டார் யாதொரு முயற்சியும் செய்யவில்லை, தொழிலற்றுக் கிடக்கும் ஜனத் தொகை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இவர்களுக் கெல்லாம் தொழில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற சிரத்தையே ஆட்சி செய்வோருக்கில்லை. எனவே, ஒவ்வொரு தொழிலிலும் ஆட்கள் ஈ மொய்ப்பது போல் மொய்க்க ஹேது உண்டாகிறது. இடையிடையே மழையும் பெய்யாமல் நின்று விடுகிறது. இவற்றை யெல்லாம் செளகரியங்களாக வைத்துக் கொண்டு முதலாளிகள் வேலையாட்களைக் கூடியவரை இறுக்கிலாபத்தைத் தாங்கள் சாப்பிடப் பார்க்கிரு.ர்கள். முதலாளி என்ருல், தான் யந்திரசாலைத் தலைவயிைருப்பினும், அல்லது ரயில்வே அதிகாரியாயிருப்பினும், கவர்ன்மெண்ட் பிரதிநிதியான போஸ்டாபீஸ் தலைவனுயிருப்பினும் வேறு எவ்விதமாக இருந்த போதிலும் எல்லாம் ஒ ன் று தா ன் . தொழிலாளியைக் கஞ்சிக்குப் பறக்க விட்டுவிட்டுத் தனது பணப் பெட்டிகளை நிரப்பிக் கொள்ளும் ஒவ்வொரு முதலாளியும் கொள்ளைக்காரரே ஒழிய வேறு ஒருவரில்லை. 'இப்போது பம்பாயிலே தபால் சேவகர்கள் தொழில் நிறுத்தியிருக்கிருர்கள். இவர்களுக்கு நாள்தோறும், பொறுப்புக்களும் கடமைகளும் அதிகரித்து வருகின்றன. சந்தையில் விலைவாசி அதிகப்பட்டு வருகின்றது. ஆனல்