பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 நிறுத்தியிருப்பார்களானல் அவர்களிடம் அதிகாரிகள் இவ்வாறு நடந்துகொள்ளத் துணிவார்களா? 'மேற்படி இரண்டு விஷயங்களிலும் அதிகாரிகள் தொழிலாளிகளை வேண்டுமென்றே ஒர வஞ்சத்துடனும், இகழ்ச்சியுடனும் நடத்துகிரு.ர்கள். ஆனால் ஒரு வேற்றுமை மட்டிலும் இருக்கிறது. பெங்காளத்து ரயில்வே தொழில் நிறுத்தம் சுதேசிய முயற்சியுடன் சம்பந்த முடையதாகக் கருதப்பட்டது. பம்பாயில் அந்த சந்தேகத்துக்கு இடமில்லை. நாட்டிலே எப்போதும் வேலையின்றிக் கிடக்கும் கூட்டத்தார்கள் இருந்து கொண்டிருப்பதனால் அல்லவா இவ்வாறு திடீரென்று வேலையாட்களைத் தள்ளுபடி செய்யும் துணிவு, அதிகாரிகளுக்கு உண்டா யிற்று. இந்த ஏழை ஜனங்கள் வயிற்றுப் பிடுங்கல் பொறுக்க முடியாமல் சொற்பச் சம்பளத்திற்கு வந்து அமர்ந்துகொண்டு விடுவார்கள். முந்திய வேலைக்காரர் களின் கதியை இவர்கள் தங்கள் சொந்த பசியினல் கவனிக்க முடியாதவர்களாக இருக்கின் ருர்கள். எனவே. ஏழைத் தொழில் நிறுத்தக் காரருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் உதவி செய்வது செல்வர்களுடைய கடமையாகும். பம்பாய் வர்த்தகர்கள் இந்த விஷயத்தில் மன இரக்கமின்றி கல்லுருவங்களைப் போல இருக்க மாட்டார்கள் என்று நம்புகிருேம்." இந்தியா. 18 - 8 - 1906,