பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரிகை மீது பாணம் சுதேசி இயக்கம் வளர்ந்து வருதல் கண்டது அரசாங்கம், அதை எவ்விதமேனும் ஒடுக்கிவிடக் கருதியது. சுதேசி இயக்கத்தை ஆதரிக்கும் பத்திரிகைகள்மீது பாணம் தொடுத்தது; பத்திரிகை ஆசிரியர்களைக் கைது செய்தது; சிறைக்கு அனுப்பியது,

பஞ்சாபி' என்ற பத்திரிகை லாகூரிலிருந்து வெளி வந்துகொண்டிருந்தது. இப்பத்திரிகை திலகர் கட்சியை ஆதரித்து வந்தது. இதன் உரிமையாளர் லாலா ஜஸ்வந்தராய் என்பவர். ஆசிரியர் அட்வனே என்பவர்.

இவ்விருவர் மீதும் அரசாங்கம் வழக்குத் தொடுத்தது. ஜஸ்வந்தராய்க்கு இரண்டு ஆண்டு கடுங்காவலும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன. ஆசிரியர் அட்வனே ஆறுமாத கடுங்காவலும் 200 ரூபாய் அபராதமும் விதிக்கப் பெற்ருர். இது லாகூர் டிப்டி கமிஷனரால் விதிக்கப்பட்ட தண்டனை. இந்த விஷயம் பற்றி பாரதியார் ஒரு தலையங்கம் எழுதினர். அதிலே அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்: இதுவரை நமது தேசாபிமானிகட்குச் சுகமாக நாட்கள் கழிந்து வந்தன. இனிமேல் இந்தியாவின் பக்தன் என்று சொல்லப்படுவோன் எத்தனையோ