பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 அதிகாரிகள் ஒரே மொத்தமாக வாயைக் கட்டிவிட மாட்டார்கள் என்று எப்படி நம்புவது? லோகல் அதிகாரி கள் இன்னதுதான் செய்வார்கள் என்பதற்கு வரம்பு இல்லாமல் போய்விட்டது. இவர்கள் கையிலே வைசிராய் இப்போது ஒரு புதிய சக்தி கொடுத்திருப்பதுதான் நமக்கு வியப்புண்டாக்குகிறது, இந்தத் தீர்மானத்திலா லேனும், வேறு எந்தத் தீர்மானத்திலாலேனும் ஜனங்கள் மனதிலே ஊறியிருக்கும் சுதேசபக்தியை நீக்க முடியா தென்பதை கவர்ன்மெண்டார் தாமே அறிவார்கள்." (இந்தியா 8 - 6 - 1907) "வர்த்தமானப் பத்திரிகைகளையும் உபந்நியாசங் களையும் அமுக்கிவிடுதல் அதிகாரிகளுக்குச் கலபம். நாளைக்கே செய்துவிடலாம். ஆனல் மனுஷ்ய ஜீவனுடைய இயற்கையை மாற்ற இந்த அதிகாரிகளால் முடியுமா? இந்தியாவிலே சுயராஜ்ய விருப்பத்துடன் உண்டா யிருக்கும் புதிய கிளர்ச்சி மனுஷ்ய ஜீவனுடைய இயற்கையைப் பற்றியது. அதை அடக்க முயல்வதைக் காட்டிலும் பேதைமை வேருென்றில்லை. ஜனங்கள் சமாதான வழி :ளை விரும்பி நிற்கும்வரை கவர்ன்மெண் டாரும் சமாதான சாந்த வழிகளை விரும்பி நிற்பதே அவர்களின் rேமத்துக்கு ஏதுவாகும். அவ்வாறின்றி அவர்கள் லார்ட் லிட்டன் காலத்து மகா கொடுர மான பத்திரிகைச் சட்டத்தைப் புதுப்பித்து தமது விருப்பத்தை சாதித்துக் கொள்ள முயலுதல் அவரி களுடைய பலவீனத்தைக் குறிப்பிடக் கூடியதாக இருக் கிறது. இத்தறுவாயில் அவர்கள் எ வ் வி த மா ன சற்போதனையையும் கேட்பார்கள் என்று தோன்றவில்லை. நேரே யோசிக்கும் திறமை அதிகாரிகளிடம் நின்று போயிருக்கின்றது. அத்தனை வெறியிலிருக்கிரு.ர்கள்,