பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 திருவள்ளுவர் 'களித்தானக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானத் தீத்து இயற்று' என்று சொல்லியிருக்கிருர். அதாவது குடிவெறியிலே இருப்பவனேடு காரணங்கள் கூறி விவகாரம் செய்ய முயலுதல் நீரின் கீழ் முழுகியிருப்பவனை விளக்கைக் கொண்டு தேட முயல்வது போலாகும் என்று அர்த்தம். தற்கால அதிகாரிகள் அதே ஸ்திதிக்கு வந்து விட்டார்கள்." (இந்தியா, - 8 - 6. 1907) ஆயிரத்துத் தொளாயிரத்து ஆரும் ஆண்டில் "பஞ்சாபி பத்திரிகை மீது பாணம் தொடுத்த அரசாங்கம் 1908-ம் ஆண்டில் இந்தியா’ பத்திரிகை மீதும் பாணம் தொடுத்தது. ஆயிரத்துத் தொளாயிரத்து எட்டாம் ஆண்டு, எட்டாவது மாதம், அதாவது ஆகஸ்டு மாதம் 21ந் தேதி "இந்தியா’ பத்திரிகை ஆபீசைப் போலீசார் சோதனை செய்தனர். அடுத்தபடி என்ன? பாரதியார் கைது செய்யப் படுவார் என்று நண்பர்கள் எதிர்பார்த்தார்கள். இந்நிலையில் என் செய்வது? பாரதியார் சிறை சென்று விட்டால் பத்திரிகையின் கதி என்ன? தேச சேவை என்ன ஆகும்? தடைப்படும் அன்ருே? எக் காரணம் பற்றியும் தேசசேவைக்குத் தடை வரலாகாது. சென்னையிலிருந்தால் பாரதி கைது செய்யப் படுவது உறுதி. தேசத் தொண்டுக்கு இடையூறு வருவதும் உறுதி. எனவே சென்னையிலிருக்கக் கூடாது. வேறு எங்காவது போய்விடவேண்டும். எங்குப் போவது?