பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு உட்படாத பகுதிக்குச் சென்றுவிட வேண்டும். இதாலிய தேசபக்தராகிய மாஜினி என்ன செய்தார்? இதாலிக்கு வெளியே இருந்து இதாலிய விடுதலைக்குப் பாடு படவில்லையா? அவர் போலவே கரிபால்டி பாடுபட வில்லையா? அம்மாதிரியே பிரிட்டிஷ் இந்திய அரசாங்க எல்லைக்கு அப்பால் சென்று இருந்துகொண்டு பாரத தேசத்துக்குத் தொண்டு செய்யவேண்டும். இவ்வாறு கருதினர் பாரதியார். நண்பர்களும் "அதுவே சரி என்றனர். அங்ங்ணமாயின் எங்கு செல்வது? புதுச்சேரியிலே நடப்பது பிரெஞ்சு ஆட்சி. பிரிட்டிஷ் ஆட்சியன்று. எனவே, புதுச்சேரிக்குப் போகலாம் என்று முடிவு செய்யப்பட்டது. பாரதியாரும் அவருடைய நண்பர்களும் எதிர்பார்த்த படியே நிகழ்ந்தது. இந்தியா ஆபீஸ் சோதனையிடப் பட்டபின் இரண்டு மூன்று நாட்களே சென்றன. ஒரு நாள் "இந்தியா ஆபீஸ் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார் பாரதியார். அதே சமயத்தில் ஒரு போலீஸ்காரனும் மேலே வந்து கொண் டிருந்தான். வந்தவன் என்ன செய்தான்? பாரதியாரிடம் ஒரு வாரண்டை நீட்டினன். "யாருக்கு?' என்ருர் பாரதியார்; இந்தியா பத்திரிகையின் ஆசிரியருக்கு என்ருன் போலீஸ்காரன். "ஆசிரியருக்குத் தானே! நான் அல்லன்' என்று கூறினர் பாரதியார், மட மட' என்று இறங்கினர்; போய் விட்டார். "இந்தியா பத்திரிகையின் ஆசிரியர் பாரதியே. ஆயினும் அரசாங்க ஏடுகளில் என்ன இருந்தது?