பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 எம். ரீநிவாசன் என்பவரே 'இந்தியா' பத்திரிகையின் ஆசிரியராகவும், வெளியிடுபவராகவும் பதிவு செய்யப் பட்டிருந்தது. எனவே அரசாங்கப் பதிவு ஏட்டின்படி இந்தியா பத்திரிகையின் ஆசிரியர் பாரதியார் அல்லர். அதைத்தான் குறிப்பிட்டாரி பாரதியார். இந்த மாதிரி நிலை வரும்போது என் செய்வது என்பது பற்றித்தான் முன்னரே முடிவு செய்யப்பட்டது அன்ருே? அதன்படியே செயல் புரியத் தொடங்கினர் பாரதியார். புதுச்சேரி, பாரதிக்குப் பழக்கமில்லாத ஊர். எனவே மண்டயம் ரீநிவாசாச்சாரியார் ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார். யாருக்கு? சிட்டி குப்புசாமி அய்யங்கார் என்பவருக்கு. அந்தக் கடிதத்தை வாங்கிக் கொண்டார் பாரதியார். எழும்பூர் ரயில் நிலையம் சென்று ரயிலேறினல் போலீசுக்குத் தெரிந்து விடும்; பின் தொடர்வார்கள். ஆகவே, எழும்பூர் சென்று ரயிலேறக் கூடாது' என்று கருதினர்: சைதாப்பேட்டை சென்ருர்; ரயிலேறினர். இரவு முழுவதும் கண் மூடவில்லை. எவளுவது போலிஸ் இலாகா பேர்வழி தன்னைத் தொடர்கிருனே என்ற சந்தேகம். அதனல் மிக மிக விழிப்புடன் சென்ருர் பாரதியார்.