பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கட்டிடத்தின் மேலே ஒரு கீற்றுக் கொட்டகை, கொட்ட கையின் உள்ளே நல்ல காற்று வீசும். இங்கேதான் தங்கி யிருந்தார் பாரதியார். சாமிநாதய்யர் என்பவரும் அந்த பங்களாவின் ஒரு புறத்திலே இருந்தார். உத்தியோகம் செய்பவரிடம் பணம் வாங்கிக் கொண்டு சாப்பாடு அளித்து வந்தார் சாமிநாதய்யர். "இந்தியா' பத்திரிகையைப் புதுச்சேரியி லிருந்து வெளியிடத் தொடங்கிய நாளிலே பாரதியாரும் இவரிடம்தான் சாப்பிட்டு வந்தார். பாரதியாருக்கு உதவியாக ஹரிஹர சர்மா வந்தார். இவரைத் தொடர்ந்து பி. பி. சுப்பையா வந்தார். சுப்பையாவைத் தொடர்ந்து என். நாகசாமி வந்தார். "இந்தியா' பத்திரிகைக்குத் தொண்டு செய்ய மேலும் சிலர் அழைக்கப்பட்டனர். ஆக ஏழுபேர் சேர்ந்து விட்டனர். கலவை பங்களாவில் இவர்கள் இருந்த இடம் எழுவர் வசிக்க ஏற்றதாக இருக்கவில்லை. எனவே வசதியான வீடு ஒன்று பார்க்கும்படி கூறினர் பாரதியார். வீடு பெரிதாக இருக்க வேண்டும். வசதியாயிருக்க வேண்டும். வாடகை யும் குறைவாயிருக்க வேண்டும். இதுதான் பாரதி இட்ட கட்டளை. வீடு தேடு படலம் தொடங்கியது. ஈசுவரன் தர்மராஜா கோவில் தெருவில் ஒரு வீடு பாரதியார் விரும்பியவாறு இருந்தது. அந்த வீட்டுக்கு வாடகை பேசினர்கள்; ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்: எல்லாரும் சென்று வசிக்கத் தொடங்கினர்கள். காலை ஐந்து மணிக்கு எல்லாரும் எழுந்து விடுவர்: சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வர். பிறகு கிணற்றின் கரை செல்வர். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக்