பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 இந்த முயற்சியில் ஒராண்டு சென்றுவிட்டது. தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள் நடத்திவந்த நவசக்தி” பத்திரிகையில் நான் உதவியாசிரியன் ஆனேன். நான் செய்து வரும் முயற்சி பற்றித் திரு. வி. க. அவர்களிடம் கூறினேன். திரு. வி. க. அவர்கள் பாரதி பற்றிய சில நிகழ்ச்சிகளை எனக்குக் கூறினர். "சுதேசமித்திரன்' பத்திரிகையின் உதவியாசிரியர் இருவரை நான் கண்டேன். இருவருள் ஒருவர் நடேசய்யர்! இன்னொருவர் உலகநாதநாயக்கர். புதுவையினின்றும் வந்த பிறகு, 'சுதேசமித்திர"னில் பாரதியார் பணியாற்றியபோது இவ்விருவரும் அவருடன் பணியாற்றியவர். இவர்களும் தாங்கள் அறிந்தவற்றைக் கூறினர்கள். இவ்வாறு விசாரித்து அறிந்தவற்றை யெல்லாம் திரட்டி ஒரு சிறு புத்தகமாக வெளியிட்டேன். புத்தகம் ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்து எட்டாம் ஆண்டு வெளிவந்தது. விலை ஐந்தே அன. பத்திரிகைகள் பாராட்டின. பாரதிபக்தர் ரா. அ. பத்மநாபன் அவர்கள் அப்போது "ஹிந்துஸ்தான்' பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார். எனது முயற்சியைப் பாராட்டினர்; வரவேற்ருர், நீண்டதொரு மதிப்புரையும் வழங்கினர். நாற்பத்து ஐந்து ஆண்டுகள் ஒடிவிட்டன. இந்த நாற்பத்து ஐந்து ஆண்டுகளில் எத்தகைய வளர்ச்சி! எத்தகைய வளர்ச்சி பாரதி நூல்கள் பல, பற்பல