பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 ரங்காச்சாரியார் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட உடனே என்ன செய்தார்? நிர்வாகச் செலவை விரிவாக்கினர்; மற்றவர் செலவைச் சுருக்கச் சொன்னர். தொழிலாளர்களிடத்திலே அநாவசியமாகக் கண்டிப்புக் காட்டினர். இவரது நிர்வாகம் கண்டு வெறுப்புக் கொண்ட பி. பி. சுப்பையா வேலையை விட்டார்; எட்டய புரம் சென்ருர். ஹரிஹர சர்மா வட இந்தியா சென்ருர், "இந்தியா ஆபீசில் நின்றவர் இருவரே. ஒருவர் பாரதியார்: இன்ைெருவர் நாகசாமி. "இந்தியா’ பத்திரிகைக்கு உயிர் கொடுத்தவர் பாரதியார்; பத்திரிகையின் மூச்சே பாரதியார்தான். பணம் சம்பாதிப்பதன் பொருட்டு அவர் பத்திரிகை ஆசிரியர் ஆனரா? இல்லை. தேச சேவைக்கு ஒரு கருவி யாகவே பத்திரிகையைக் கருதினர். அவருடைய எழுத் தினுல்தான் பத்திரிகைக்கு அந்தக் காலத்திலே ஐயாயிரம் சந்தாதாரர்கள் ஏற்பட்டார்கள். ஒரு பத்திரிகை ஆசிரிய னுக்கோ, அல்லது எழுத்தாளனுக்கோ நேரம் காலம் இல்லை. எங்கிருந்தாலும், எந்த நிலையிலிருந்தாலும், எப்போதும் அவன் தன் பத்திரிகை பற்றியும் தான் எழுத வேண்டிய விஷயம் பற்றியுமே எண்ணிக் கொண்டிருப் பான். இந்த விஷயம் சில களி மண் மண்டை'களுக்கு விளங்குவதில்லை. இந்த மாதிரி களி மண் மண்டைகள்: இந்தக் காலத்திலும் உள்ளன. எழுத்தாளன் பத்திரி காசிரியன் என்ருல் அவன் ஒர் இயந்திரம் என்று கருதும் களி மண் மண்டைகளை’ என்ன என்று சொல்வேன்! இத்தகைய மண்டை படைத்த மகாப் பிரபுவாக விளங் கினர் அந்த ரங்காச்சாரியார். "ஆபீசுக்கு இந்த நேரத்துக்கு வரவேண்டும்; இந்த நேரத்துக்குப் போக வேண்டும்; இந்த நேரம் முதல் இந்த