பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 நேரம் வரை ஆபீசில் இருக்க வேண்டும்" என்று பாரதி யாருக்கு உத்தரவு விதித்தார். எத்தகைய கட்டுப்பாட்டையும் விரும்பாதவர் பாரதியார். ரங்காச்சாரியின் கட்டுப்பாட்டை விரும்பு வாரா? விரும்பமாட்டார். அதுவரை "இந்தியா ஆபீசிலிருந்து அவருக்குச் சம்பளமாக என்ன கொடுத்தார்கள்? கைச்செலவுக்கு வேண்டிய சிறு தொகைதான். ரங்காச்சாரியின் க ட் டு ப் பா டு வந்த உடனே பாரதியார் என்ன சொன்னர்? தமக்குச் சம்பளம் கொடுக்க வேண்டும்; கணிசமான தொகை கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். மற்ற விஷயங்களில் கண்டிப்பாயிருந்த ரங்காச்சாரி பாரதியாரின் கண்டிப்பைக் கண்ட உடனே அதற்கு இணங்க மறுத்தார். இந்தப் பூசல் சில நாட்கள் வரை தொடர்ந்து நடைபெற்றது. ஒரு நாள் காலையில் அப்பூசல் முற்றியது. ரங்காச்சாரி கையை ஓங்கிக் கொண்டு பாரதியை அடிக்கப் போனர். அப்போது நாகசாமி குறுக் கிட்டார்; ரங்காச்சாரியைத் தடுத்தார்; பாரதியை அழைத்துக் கொண்டு வெளியேறினர். பாரதிக்கு மனம் பதைத்தது: நடை தடுமாறியது. 'இனி அங்குப் போகக் கூடாது' என்ருர். 'என்ன செய்யலாம்” என்று யோசித்தார். அந்தக் காலத்திலே புதுவையிலே மிக்க செல்வாக் குடன் விளங்கினர் ஒருவர். அவர் பெயர் சைகோன் சின்னய்ய நாயுடு என்பது. அவர் புதுவை அரசியலில் ஒரளவு ஈடுபட்டவர்; முதல்தரமான அச்சுக்கூடம் ஒன்றும் வைத்திருந்தார்; அந்த அச்சுக்கூடத்தில் அச்சுப்போட்டு