பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 நாயுடு என்ன செய்தார்? சூரியோதயம் பத்திரி கையின் சிறப்பு இதழ் ஒன்று வெளியிட்டார். பாரதியார் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டதாக அறிவித்தார். பாரதியும் ஆசிரியர் பொறுப்பு ஏற்ருர். 'குரியோதயம்' வெகு வேகமாக விரிந்து வளர்ந்தது. சில மாதங்களுக்குள் ஐயாயிரம் சந்தாதாரர் கள் சேர்ந்து விட்டார்கள். பத்திரிகை நன்ருக ஒடிக் கொண்டிருந்தது. அந்த சமயத்திலே, வங்காளத்திலே பாபு அரவிந்த கோஷ் விடுதலை பெற்றுச் சிறையினின்றும் வெளியே வந்தார். வெளிவந்த அரவிந்தர் உத்தர்பாரா என்ற இடத்திலே ஒரு சொற்பெருக்காற்றினர். அந்தச் சொற்பொழிவு மிகச் சிறந்த ஒன்று என்று எல்லாரும் போற்றினர். அந்தச் சொற்பொழிவைத் தமிழிலே வடித்துச் 'சூர்யோதய'த் திலே வெளியிட்டார் பாரதியார். பின்னே அதனைத் துண்டுப் பிரசுரமாக வெளியிடக் கருதினர். துண்டுப் பிரசுரம் வெளியிடுவது பற்றிப் பாரதியும் நாயுடுவும் இரு விதக் கருத்துக் கொண்டனர். பாரதியின் கருத்தை நாயுடு ஏற்கவில்லை. நாயுடுவின் கருத்தை பாரதி ஒப்பவில்லை. இருவரும் மனவேறுபாடு கொண்டனர். இக் காரணத் தில்ை, பாரதியார் சூரியோதயம் பத்திரிகையினின்றும் விலகினர். இது 1909ம் ஆண்டு நிகழ்ச்சி. இந்த சமயத்திலேதான் இந்தியா’ பத்திரிகை பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் தடுக்கப்பட்டது. "இந்தியா’ பத்திரிகையின் சந்தாதாரர் பெரும்பாலோர் பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்தனர். பத்திரிகை அவர் களுக்குப் போய் சேராவிட்டால் என்ன செய்தல் கூடும்? பத்திரிகை வெளியிடுவது நிறுத்தப்பட்டது.