பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 இந்தியா பத்திரிகையை நிறுத்திய பின் பூரீதிவாசாச் சாரியார் என்ன செய்தார்? மற்ருெரு தினசரிப் பத்திரிகை தொடங்கினர். அப்பத்திரிகையின் பெயர் விஜயா என்பது. விஜயாவுக்கு ஆசிரியராக யாரை நியமிக்கலாம்? யோசித்தார் பூரீநிவாசாச்சாரியார், இந்த சமயத்திலே பாரதியார் சூர்யோதயம் பத்திரிகையை விட்டு விலகினர் என்ற செய்தி கேட்டார்; பாரதியாரைச் சந்தித்தார்; விஜயா'வுக்கு ஆசிரியராகப் பணிபுரியுமாறு பாரதியை வேண்டினர். விஜயா பத்திரிகை தினசரியாதலால் தேச சேவை செய்யும் வாய்ப்பு அதிகம் என்று கருதினர் பாரதியார். எனவே "விஜயா'வின் ஆசிரியர் பொறுப்பு ஏற்ருர். சில நா ட் க ளு க் கு ப் பின் என்ன ஆயிற்று? 'சூர்யோதயம் விஜயா ஆகிய இரு பத்திரிகைகளுக்குமே தடை விதிக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய எல்லைக்குள் இவை வரலாகா என்று பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் தடை விதித்தது. இவ்வளவில் பாரதி தம் பத்திரிகை முயற்சியைக் கைவிட்டார். ஆயிரத்துத் தொளாயிரத்து ஒன்பதாம் ஆண்டு. ஓர் அவுன்ஸ் புதிய சீர்த்திருத்தம் வழங்கியது பிரிட்டிஷ் அரசாங்கம். மின்டோ-மார்லி சீர்திருத்தம் என்று இது பெயர் பெற்றது. இது பாரதியாருக்குத் திருப்தி அளிக்க வில்லை. இதை எதிர்த்தார் அவர். ஆனல் மிதவாதத் தலைவரான வி. கிருஷ்ணஸ்வாமி அய்யரோ இந்தச் சீர்திருத்தத்தை வரவேற்ருர். 1909ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதியாக அவர் நியமிக்கப் பெற்ருர். அவரும் அப் பதவியை ஏற்ருர்.