பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 தென் ஆப்பிரிக்கா திரும்பினர் காந்தி. தென் ஆப்பிரிக்கா சென்ருல் அந்த அரசாங்கம் தம்மைச் சிறையில் அடைக்கும் என்பதை அறிந்திருந்தார் காந்தி. சிறைக்குப் பயந்து லண்டனிலேயே தங்கி விட்டாரா? மற்ற அரசியல் தலைவர் களைப்போல வெளிநாடுகளில் இருந்து பிரச்சாரம் செய்ய விரும்பினரா? இல்லை; இந்திய மக்கள் நடுவில் இருக்கவே விரும்பினர். அவரது செயலைப் பாராட்டினர் பாரதியார். இந்தியா’ பத்திரிகையிலே ஒரு கார்ட்டுன் வெளியிட்டார். அதற்கு ஒருவிளக்கமும் எழுதினர். அந்தக் கார்ட்டுனும், விளக்கமும் 1909 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ந் தேதியிட்ட இந்தியா பத்திரிகையிலே வெளிவந்தன. கார்ட்டூனுக்குக் கீழே பின் வருமாறு வெளியிடப் பட்டிருந்தது! காந்தி யென்ற பசு வந்து கொண்டிருக்கிறது; சில புவிகள் அதன்மீது பாய்கின்றன. இதுதான் சித்திரம். சித்திரத்தின் அடியில். பூரீ காந்தி யென்ற பகவானது தனது கன்றுக்குட்டியாகிய இ.த ர இந்தியர்களின் நன்மையின் பொருட்டு இங்கிலாந்துக்குப் போய்ப் பேசி விட்டு, சிறையிலடைபடுவதற்காக மறுபடியும் திரான்ஸ் வாலுக்கு வந்திருக்கிறது. தென் ஆ ப் பி ரி க் கா உத்தியோகஸ்தர்களாகிய புலிகள் அவருடைய மேன் மையை அறியாமல் சிறையிலடைத்தார்கள். படத்துக்கு விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது: முற்காலத்தில் நடந்ததாக ஹிந்துக்களின் புராணங் களில் சொல்லியிருக்கும் வி ஷ ய ம் அநேகருக்குத் தெரிந்திருக்கலாம். ஒரு காட்டில் புலியின் வாயிலகப்பட்ட பகவானது தன்னுடைய கன்றுக்குட்டிக்குப் பால் கொக்டு