பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f64 காமல் வந்துவிட்டபடியால் புலி யை ப் பார்த்து, ஹே பிரபு இன்று என்னுடைய கடமையைச் செலுத் தாமல் வந்து விட்டேன். என்னுடைய கன்றுக்குப் பால் கொடுக்கவில்லை. ஆதலால் நான் இப்பொழுதே போய்ப் பால் கொடுத்துவிட்டு வந்து உமக்கு இரையாய் விடுகிறேன். உத்தரவளிக்க வேணும்' என்றது. புலி நெடுநேரம் யோ சி த் து, அதனுடைய லத்தியத்தைப் பரீட்சிக்கும் பொருட்டு, "போய்க் காரிய மான உடனே வந்து விடு” என்று சொல்லி அனுப்பியது. பின்பு பகவானது கன்றுக்குப் பால் கொடுத்துவிட்டு, அதைத் தன்னுடைய சிநேகிதியான மற்ருெரு பகவினிடத் தில் ஒப்புவித்து விட்டு, புலியினிடத்தில் வந்து, "என்னு டைய தர்மத்தைச் செய்துவிட்டு வரும்படி உத்தரவளித்த தற்கு உமக்கு வந்தனமளிக்கிறேன். என்னைப் புசியும்" என்றது. இதைக் கண்ட புலி ஆச்சரியப்பட்டு, 'அம்மா, லத்திய தேவதையே, உன்னைப்புசித்துவிட்டு நான் எந்த நீச கதிச்குப் போவேன்! நான் இதுவரைக்கும் செய்தது போதும்' என்று சொல்லிப் பட்டினியிருந்து பிராணனை விட்டது. இப் பசுவைப் போல் நடந்துகொண்ட நமது பூரீ காந்தி பிரபுவை தென் ஆப்பிரிக்கப் புலிகள் என்ன செய்கின்றன பார்த்தீர்களா? ஒன்றும் தெரியாத புலிகூட இந்துஸ்தானத்தில் தயையினுடைய பிரவாகத்தைத் தடுக்க முடியவில்லை, ஆனல் தென் ஆப்பிரிக்காவில் மனுஷிய ரூபம் தரித்துப் புலியைப் பார்க்கிலும் கொடுமை யாக (தங்களுக்கு உதவி புரிந்த) இந்தியர்களை நடத்தும் நா. க ரி க ஆங்கிலேயர்களே இக் கவிகாலத்தில்தான் காணலாம்." இவ்வாறு எழுதி வெளியிட்டார் பாரதியார்.