பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 1909 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ந் தேதி இந்தியா விலே ஒரு தலையங்கமும் எழுதி வெளியிட்டார் பாரதியார். கடைசியாக ஜயம் காந்தி பக்கம்தான். அதற்கு சமுசயமில்லாவிட்டாலும் மனிதர்கள் நெஞ்சம் ஏழை நெஞ்சாகையால் அவர் இப்போது படும் கஷ்டத்தைக் கேட்க சகிக்கவில்லை." இவ்வாறு குறிப்பிட்டார் பாரதியார், இவ்வளவில் நின்ருரா? இல்லை. தென் ஆப்பிரிக்க இந்தியர் தம் போராட்டத்துக்கு நிதி சேர்த்து உதவு வதற்கும் முற்பட்டார். 1909-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ந் தேதியிட்ட "இந்தியாவிலே பின்வரும் வேண்டுகோளைக் காணலாம். "தென் ஆப்பிரிக்காவிலுள்ள இந்தியர்களிலே பெரும் பாலோர். தமிழர்களே. அப்படியிருந்தும் நாம் இவ் விஷயத்தில் அசிரத்தையாக இருப்பது கிரமமன்று. ஆகையால் இந்தியா பத்திரிகை நிதி என்பதாக ஒன்று சேர்த்துச் சென்னப் பட்டணத்தில் உள்ள சபையின் காரிய தரிசிக்கு அனுப்ப உத்தேசித்திருக்கிறது. தமிழர்கள் அனைவரும் உதவி செய்ய வேண்டும்.” இவ்வாறு ஒரு வேண்டுகோள் விடுத்து நிதி திரட்டினர் பாரதியார். முதன் முதலாக "இந்தியா’ பத்தி ராதிபர் பெயரால் பத்து ரூபாயும் பாரதி பெயரால் ஐந்து ரூபாயும் வரவு வைத்து மேற்படி நிதியை சேகரிக்கத் தொடங்கினர். பாரதியார் புதுவையில் வாழ்ந்த போது இளைஞர் பலர் இவரைச் சுற்றி இருந்தனர். அவருள் ஒருவர் வ. ரா.