பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 என்பவர். திருப்பழனம் வ. ராமஸ்வாமி ஐயங்கார் என்பது இவருடைய முழுப்பெயர். திருப்பழனம் என்பது தஞ்சை மாவட்டத்திலே திருவையாறுக்கு அருகே உள்ளதொரு அந்தக் காலத்திலே திருச்சியிலே முக்கிய அரசியல் தலைவராக விளங்கியவர் கொடியாலம் ரங்கசாமி அய்யங்கார் என்பவர். அவர்தான் இந்த வ. ராவைப் புதுச்சேரிக்கு அனுப்பினர். எதன் பொருட்டு அனுப்பினர்? அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்து விட்டாரா என்பதை அறிந்து வரும் பொருட்டு அனுப்பினர். புதுச்சேரி சேர்ந்தார் வ. ரா. அரவிந்தர், பாரதி ஆகிய இருவரையுமே கண்டார்; பாரதியின் பால் பெரிதும் ஈடுபட்டார், புதுவையில் அடைக்கலம் புகுந்த தேசபக்தர்கள் பணத்திற்கு என்ன செய்தார்கள்? பணம் எங்கிருந்து வந்தது? பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து வந்தது. பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து புதுச்சேரிக்குப் பணம் தருவித்துத் தேச பக்தர்களுக்கு வழங்கிய மாயாஜாலக்காரர் வ. ரா. அவர் எப்படிப் பணம் வரச் செய்தார்? வியாபாரம் செய்தார். என்ன வியாபாரம்? நெய் வியாபாரம். ஆறுமுகம் செட்டியார் என்பவர் புதுவையைச் சேர்ந்தவர். அவர் பெயருக்கு நெய் டின் வரும். நெய் டின்னிலே நெய் மட்டுமா வரும்? பணமும் வரும் , டின்னிலே ரூபாயைப் போட்டு விட்டு மேலே நெய்யை நிரப்பி அனுப்புவார்களாம் சென்னையில் உள்ள சில அன்பர்கள். நெய் ஆறுமுகத்துக்கு ரூபாய் வ. ராவுக்கு. இப்படி ரூபாய் வரச் செய்து தேச பக்தர்களுக்குக் கொடுப் பாராம் வ. ரா. புத்தகத் தபாலில் புத்தகங்கள் வரும். புத்தகத்தின் அட்டையைக் கிழித்தால் ரூபாய் நோட்டு