பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 இருக்கும். இப்படியாகப் பணம் வரச் செய்து வந்தார் @!. (Tባr• ஆறுமுகம் செட்டியார் என்பவர் செல்வாக்கு மிக்க வியாபாரி: சாது: அரசியல் அறியாதவர். இவர் வீட்டில் சீமை வெள்ளை எலிகளை வளர்த்து வந்தார். அதனல் ‘எலிக்குஞ்சு செட்டியார் என்று இவரை அழைத்தார் பாரதியார். (சித்திர பாரதி-ரா. அ. பத்மநாபன்) எட்டயபுரம் ஜமீந்தார் பாரதியின் தாய் வழிப் பாட்டனுரைப் புதுச்சேரிக்கு அ னு ப் பி ளு . ஏன் அனுப்பினர்? பாரதியை எட்டயபுரத்துக்கு அழைத்து வரும்படி கூறி அனுப்பினுt. புதுச்சேரியில் வாழ்ந்த பாரதி எட்டயபுரம் வந்து விட்டால் பிறகு பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் அவரைக் கைது செய்து சிறையில் தள்ளி விடலாம் அல்லவா? இது ஒரு சதித்திட்டம். வெள்ளை அரசாங்கம் இந்த சதியை உருவாக்கியது. அதற்கு எட்டயபுரம் ஜமீந்தாரை ஒரு கருவியாக்கியது. ஜமீந்தாரும் இதற்கு இணங்கினர். எனவே பாரதியின் பாட்டனரையும் பாட்டியாரையும் புதுவைக்கு அனுப்பினர்; பாரதியை அழைத்து வரும்படி துாண்டினர். பாரதியின் பாட்டனர் ராமஸ்வாமி ஐயர், பாட்டியார் பாரதியின் மாமா சாம்பசிவ ஐயரி ஆகிய மூவரும் புதுவை சென்றனர். மூவரையும் கண்டார் பாரதி; மகிழ்ந்தார்; அன்புடன் உபசரித்தார். ஆனல் அவர்கள் வந்த நோக்கம் என்ன? மெதுவாக அந்த நோக்கத்தை வெளியிட்டார் பாட்டனர்.