பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 பாரதியார் தாம் பாடிய பாடல்களே இவரிடம் புடித்துக் காட்டுவார். மாலையிலே பாரதி வீட்டில் நண்பர்கள் கூடியிருப்பார்கள். வெல்லச்சு செட்டியாரும் இருப்பார். வந்துள்ள நண்பர்களே உபசரிக்கப் பணம் வேண்டுமே! பாரதியாரிடம் பணம் இராது. என் செய்வார்? காட்டிலே திருடனுக்குப் பயந்து கட்டைபோல் கிடந்த செட்டியின் கதையைச் சொல்வார். மடியிலே பணத்தை வைத்துக் கொண்டு காட்டிலே படுத்திருந்தாரி ஒரு செட்டியார். திருடர் வந்தனர். செட்டியார் என்ன செய்தார்? மரக்கட்டை போல் கிடந்தார். மரக்கட்டை” என்று கூறிப் போனன் திருடன். தம்மை மரக்கட்டை என்று கூறியதும் செட்டியாருக்குக் கோபம் வந்துவிட்டது. "உங்கள் வீட்டு மரக்கட்டை இப்படித்தான் மடியில் பத்து ரூபாயுடன் படுத்துக் கிடக்குமோ” என்ருர் செட்டியார். பிறகு கேம்க வேண்டுமா? திருடர் செட்டியார் மீது பாய்ந்தனர். ரூபாய் பறி போயிற்று. இப்படி பாரதியார் சொன்ன உடனே வெல்லச்சு செட்டியார் என்ன செய்வார்? தமது மடியிலிருந்து பத்து ரூபாயை எடுத்து பாரதியிடம் கொடுத்து விடுவார். "கதையில் வந்தவன் திருடன்; நானே பகல் கொள்ளைக்காரன்" என்று கூறிச் சிரிப்பார் பாரதியார். புதுவை முத்தியாலுப் பேட்டை அருகே ஒர் அழகான தோப்பு இருந்தது. அது வெல்லச்சு செட்டியாருக்குச் சொந்தமானது. அந்தத் தோப்பிலேதான் நீண்ட நேரம் இருப்பார் பாரதியார். அவர் தம் குயில் பாட்டுப் பிறந்த தோப்பும் அதுவே.