பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 அரவிந்தரை வரவேற்ருர் பாரதியார். கலவை இல்லத்துக்கு அழைத்து வந்தார். ஆறு மாதங்கள் சென்றன. வ. வே. சு. அய்யரும் புதுவை சேர்ந்தார். பாரதி, அய்யர் ஆகியோர் இருவரும் நாள்தோறும் அரவிந்தர் இருக்குமிடம் செல்வர்: அங்கே வேதம் பயில்வர்: உபநிஷதம் படிப்பர். இந்திய தத்துவ நூல்களை எல்லாம் ஆராய்வர். இவ்விதம் நாட்கள் சென்றன. அரவிந்தரின் வருகையும் அய்யரின் நட்பும் பாரதியின் மனப்போக்கிலே பெருத்த மாறுதலை நிகழ்த்தின grearsūryub. சுதேசிக் கிளர்ச்சிக்கு வேகம் தந்த அரவிந்தர் புதுவை அடைந்த பின் ஆன்மிக ஞான விசாரணையில் ஈடுபட லானர். பாரதியின் உள்ளம் அதில் ஒன்றியது. அதன் விளைவே புதுவையில் மலர்ந்த பாரதி பாடல்கள். ஆயிரத்துத் தொளாயிரத்து எட்டாம் ஆண்டு சிறை புகுந்த வ. உ. சி. 1912 ம் ஆண்டில் விடுதலை பெற்று வெளியே வந்தார்; புதுச்சேரி சென்ருர்; பாரதியைக் கண்டார்; அவருடன் சில நாள் இருந்தார்; பின் சென்னை திரும்பினர். ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதிலைாம் ஆண்டு, முதலாவது உலகப் போர் தொடங்கியது. ஆயிரத்துத் தொளாயிரத்து எட்டாம் ஆண்டு மாண்டலே சிறையில் அடைக்கப்பட்ட திலகர் ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதிலைாம் ஆண்டில் விடுவிக்கப் பெற்ருர்.