பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L75 அன்னி பெசண்டைக் கிண்டல் செய்து ஒரு சிறு துண்டுப் பிரசுரம் வெளியிட்டார். அது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. பொன்வால் நரி என்பது அத் துண் டுப் பிரசுரத்தின் பெயர். சுமார் பத்து ஆண்டுகள் புதுவையில் வாழ்ந்தார் பாரதியார். இந்தப் பத்து ஆண்டுகளில் பலர் அவருக்கு நண்பர் ஆயினர். வறுமை வாழ்வுதான் ஆயினும் அவர் தமது வறுமை காரணமாக எவருக்கும் பணிந்தார் அல்லர்; எவரிடமும் யாசித்தார் அல்லர். அவர் தம் பெருமையை அறிந்தோர் சிலர் தாமாகவே வலிய உத வினர். புதுவை வாழ்வின் பின் பகுதிக்காலத்தில் சுதேசமித் திரன் உதவி வழங்கியது. 'சுதேசமித்திரன் நிர்வாகம் அரங்கசாமி அய்யங்கார் கைக்கு மாறியது. "அரசியல் கட்டுரைகள் எழுத வேண்டாம். வேறு விஷயங்கள் எழுதவும் என்று பாரதி யைக் கேட்டுக் கொண்டார் அய்யங்கார். மாதம் தோறும் முப்பது ரூபாய் அனுப்பி வந்தார். அந்த ரூபாய் பாரதியின் குடும்ப வாழ்வுக்குப் பேருதவியாக இருந்தது.