பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுதி நாட்கள் ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதினெட்டாம் ஆண்டு முதலாவது உலகப்போர் முடிந்தது. அமைதி ஏற்பட்டது. 1919-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் மாண்டெகுசெம்ஸ் போர்டு சீர்திருத்தம் வழங்கியது. இது இரட்டை யாட்சி என்று அழைக்கப்பட்டது. இதன்மூலம் இந்திய நிர்வாகத்திலே இந்தியர்களுக்கு ஒரளவு பங்கு கிடைத்தது. இந்த சமயத்திலே பாரதியார் புதுவையிலிருக்க விரும்பி ஞர் அல்லர்: பிரிட்டிஷ் இந்தியாவுக்கு வந்துவிடவேண்டும் என்று துடித்தார்; புதுவையினின்றும் புறப்பட்டார்: கடலூர் அருகே வந்தபோது, கைது செய்யப்பட்டார். இருபது நாட்கள் சிறைவாசம் செய்தார். நிபந்தனை யுடன் விடுவிக்கப்பட்டார். என்ன நிபந்தனை? அரசியலில் கலந்து கொள்ளல் கூடாது. குறிப்பிட்டதோர் ஊரில்தான் வசிக்கவேண்டும். இந்த நி ப ந் த னை க் ளை ஏற்றுக் கொண்டார் பாரதியார்: விடுவிக்கப் பெற்ருர்: விடுதலை பெற்ற உடனே பாரதியார் கடயம் சென்ருர்; அங்கேயே இருந்தார். பாரதியின் வி டு த லை க் கு க் காரணராயிருந்தவர் சுதேசமித்திரன் அரங்கசாமி அய்யங்கார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதினர் பாரதியார்.