பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 ஜமீந்தார் ‘என்ன செய்தார்? பாரதியைப் பார்த்தாரா? பரிசு வழங்கினரா? இல்லை; இல்லை? பார்க்கவு மில்லை. பரிசு வழங்கவுமில்லை. பதில்கூட அனுப்பவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நல்ல பிள்ளைகள் எப்படி பாரதிக்கு ஆதரவு நல்குவார்கள்? பாரதியார் மனம் மிக நொந்தார். "இனி மனிதனைப் புகழ்ந்து பாடுவதில்லை" என்று உறுதி கொண்டார். எட்டயபுரம் ஜமீந்தாருக்கு பாரதி எழுதிய ஓலைத் தூக்கு அவர் மனம் ஒப்பிய ஒன்று என்று சொல்ல முடியாது. பாரதியின் இளமை வாழ்வு நமக்கு என்ன அறிவிக் கிறது? பாரதியார் ஜமீந்தாரைத் துதி பாடி வாழ்ந்தவர் அல்லர் என்று தெரிவிக்கிறது. சின்னச் சங்கரன் கதையும் அவ்வாறே அறிவிக்கிறது. அத்தகைய ஒருவர் ஜமீந்தாரின் புகழ் பாடி ஒர் ஒலைத் தூக்கு எழுதினர் என்ருல் அது வறுமையின் கொடுமையே! அவர் பெருமையை அறியாது அவருடன் நெருங்கி வாழ்ந்தவரின் வற்புறுத்தலே அவ்வாறு எழுதத் துTண்டியது எனலாம். சேற்றுார் ஜமீந்தாரைப் பார்க்கலாம் என்று கரு தினர் பாரதியார். சேற்றுாருக்குப் போனர். ஒரு நாள் முழுவதும் . காத்திருந்தார். ஜமீந்தாரைக் காணல் இயலவில்லை. ஜமீன் உத்தியோகஸ்தர்கள் என்ன சொன்னர்கள்? "ஜமீந்தார் வரவில்லை; இன்னும் எழுந்திருக்கவில்லை.” என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள். "சரி எலிமலை ஜமீந்தாரைப் பார்க்கலாம்" என்று எண்ணி அங்கு சென்ருர் பாரதியார். -