பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 இல்லையென்னும் சொல்லபன்றி ஏதுமறியான் சேற்றுாரான் இல்லையென்றும் சொல்லான் எலிமலையான்-எல்லையிலா மோகவலேயில் மூழ்கி முத்திநெறி பேசுகிருன் பாகவத னென்னும் பதர். ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்து ஏழாம் ஆண்டிலே எட்டயபுரம் குருகுகதாசபிள்ளே அவர்களுடன் நான் பேசியபோது அவர் இந்த நிகழ்ச்சியைக் கூறினர்; இந்தப் பாடலையும் கூறினர். ஆனால், இதை நான் அப்போது வெளியிட்ட புத்தகத்தில் சேர்க்கவில்லை. பதினைந்து ஆண்டுகள் சென்றன. ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்து ஒன்ரும் ஆண்டின் இறுதியிலே, நான் ராஜபாளையம் சென்றேன். அங்கே சில நாட்கள் தங்கினேன். அப்போது அய்யங்கார் ஒருவரைச் சந்தித்தேன். அவருக்கு அப்போது வயது ஐம்பது இருக்கும். ராகவ அய்யங்கார் என்பது அவர் பெயர். ராஜபாளையத்துக்கு அருகே ஒரு கிராமத்தில் வாழ்ந்தார் அவர். ஒருவர் மட்டும் சவாரி செய்யக்கூடிய சிறிய ஒற்றை மாட்டு வண்டியில் வந்தார் அவர். முழங்காலுக்கு மேல் துணி கட்டியிருந்தார். "இவர் பாரதியாரைப் பார்த்திருக்கிருர்" என்று என்னிடம் சொன்னுரிகள் எனது நண்பர்கள். 'அப்படியா!' என்றேன். 'பாரதியாரை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டேன் தான். அவர் உடனே இந்தப் பாடலைப் பாடினர். பாரதியார் ராஜபாளையத்துக்கு வந்து கொட்டகையில் தங்கியதைக்