பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 கூறினர். தர்மராஜா உணவு, துணி, பணம் முதலியன அனுப்பினர் என்றும் கூறினர். "இந்தப் பாட்டு உங்களுக்கு எப்படித் தெரிந்தது' என்று கேட்டேன். "அரையன காசுகொடுத்து, இரண்டுகார்டு வாங்கி வரச் சொன்னரே! அந்தச் சிறுவன்தான் நான். இப் பொழுது பெரியவனகிவிட்டேன். பாரதியார் எழுதிய பாடலை ஒரு நோட்டில் எழுதி மனப்பாடம் செய்து கொண்டேன்' என்ருர் அவர். கடையம் வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டது பாரதிக்கு. மீண்டும் சென்னை சேர்ந்தார். 'கதேச மித்திரன் அவரை ஏற்றுக் கொண்டான். மகிழ்ந்தாரி பாரதி; உற்சாகம் கொண்டார். தொடக்கத்தில் ஒரிரு மாதங்கள் தம்பு செட்டித் தெருவிலே ஒரு வீட்டில் வசித்தார். அது அவருக்குப் பிடிக்கவில்லை. திருவல்லிக்கேணியிலே ஒரு வீட்டிலே குடிபுகுந்தார். அங்கிருந்து மித்திரன் காரியாலயம் சென்று வேலை பார்த்து வந்தார். அப்போது 'சுதேசமித்திரன் காரியாலயம் எங்கிருந்தது தெரியுமா? சென்னை ஜியார்ஜ்டவுன் எரபாலு செட்டித் தெருவில் இருந்தது. பாரதியார் திருவல்லிக்கேணி தெளிசிங்கப் பெருமாள் கோவில் தெருவில் உள்ளதொரு வீட்டில் குடியிருந்தார். ஆபீசுக்குச் சென்று வரவும், இடைவேளையில் காப்பி சாப்பிடவும் காசு கொடுப்பார் அவரது மனைவி. காசைப் பெற்றுக் கொண்டு புறப்படுவார். ஆபீசுக்குப் போகும் வழியில் பூக்கடையைக் காண்பார். அங்கே செல்வார்,