பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பூ வாங்குவார். என்ன பூ? அரளிப்பூ! அரளிப் பூவை வாங்கிக் கழுத்திலே மாலையாக அணிந்து கொள்வார். அதிலே அவருக்கு மகிழ்ச்சி. கையிலே இருந்த காக செலவழிந்து விடும். பகல் சிற்றுண்டிக்குக் காசு இராது. அதுபற்றி அவர் கவலைப்படமாட்டார். எவராவது அன்புடன் அழைத்துச் சிற்றுண்டி அளித்தால் வாங்கி உண்டார். அவரைப் பாராட்டுவார். பார தி யா f ன் நண்பர் ஒருவர். அவர் பெயர் உலகநாத நாயக்கர், அவரும் கதேசமித்திரனில் ஒர் உதவி ஆசிரியராகப் பணி புரிந்தார். நாயக்கருக்கு பாரதியார்மீது அன்பு: மதிப்பு: மரியாதை. பாரதியாருக்கும் நாயக்கரிமீது அன்பு. வீட்டிலிருந்து சிற்றுண்டி கொண்டு வ ரு வா ? நாயக்கர். பகல் நேரத்திலே பசியாறுவார்; பாரதியாருக்கு வழங்குவார். பாரதியாரும் மிக்க மகிழ்ச்சியோடு அதை வாங்கி உண்பார். ஒரு நாள், தேளும்பேட்டையில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் நாயக்கர். அக் கூட்டத்தில் பேசுமாறு பாரதியாரை அழைத்தார். கூட்டம் தொடங்க வேண்டிய நேரம் மாலை ஐந்து மணி. பாரதியார் என்ன செய்தார்? பகல் ஒருமணிக்கே ஒரு ரிக்ஷாவில் ஏறிக்கொண்டு நாயக்கர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார். நல்ல வெயில்காலம். வெயிலின் வெப்பம் தாங்க முடியவில்லை. "இந்த வெய்யிலில் ஏன் புறப்பட்டு வந்திர்கள்?" என்று கேட்டார் நாயக்கர்,