பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 'தம்பீ! நீ பஞ்ச தந்திரக் கதை படித்திருக்கிருயா? 'நண்பனவிடச் சிறந்தவன் வேறு எவ னு மி ல் லை. நண்பனுடன் பேசிக்கொண்டிருப்பதே இன்பம் என்று சொல்கிறது. பஞ்சதந்திரம். நீ எனது நண்பன்; மிக நல்லவன். உன்னுடன் பேசிக்கொண்டிருப்பதே எனக்கு இன்பம். அதனால்தான் இந்த வெய்யிலையும் பொருட் படுத்தாது வந்தேன்" என்ருர் பாரதியார். பிறகு இருவரும் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தனர். - கூறியவர்: உலகநாத நாயக்கர். "இன்று எங்கள் வீட்டில் சொஜ்ஜி பண்ணியிருக்கிருt என் மனைவி. காலையில் நான் தின்றேன். ருசியாயிருந்தது. நீயும் வா? உனக்கும் கொடுக்கிறேன்" இவ்வாறு கூறித் தமது நண்பர் உலகநாத நாயக்கரை அழைத்தார் பாரதியார். "சரி' என்ருர் நாயக்கர். பாரதியாருடன் அவருடைய வீட்டுக்குச் சென்ருt. வீட்டில் ஓரிடத்தில் இருக்கச் சொன்னர் பாரதியார். உள்ளே சென்ருர். 'சொஜ்ஜி' யைத் தேடினர். கிடைக்க வில்லை. திரும்பி வந்தார் பாரதியார். நண்பர் அருகில் உட்கார்ந்துகொண்டார். 'தம்பீ! நீ தங்கக் கம்பி பத்தரை மாற்றுத் தங்கம். நீ சொஜ்ஜி சாப்பிடவேண்டும் என்று எண்ணி உன்னை அழைத்து வந்தேன். சொஜ்ஜி இல்லையே' என்று சொல்லிவிட்டுத் தேம்பித் தேம்பி அழுதார். 'அதனால் என்ன! வருத்தப் படாதீர்கள். இன்னெரு நாள் தின்ருல் போகிறது" என்ருர் நண்பர்,