பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பாரதியார் வந்த உடனே மகாத்மாவுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கலாம் அல்லவா! அவ்விதம் செய்ய வில்லை. ஏன்? அதுதான் தமிழ் நாட்டின் சாபக்கேடு. பாரதியார் திலகரின் கோஷ்டியில் முன்னின்று கதேசிக் கிளர்ச்சி செய்ததை இவர்கள் அறியவில்லையா? விபின சந்திர பாலரை அழைத்துவந்து சென்னையில் குருவளிப் பிரச்சாரம் செய்வித்தாரே! அதை இவர்கள் அறியமாட்டார்களா? இவற்றையெல்லாம் கூறி மகாத்மாவுக்கு பாரதியை அறிமுகம் செய்திருக்கலாமே! ஏன் அவ்வாறு செய்ய வில்லை? அதுதான் போகட்டும். மகாத்மா காந்தியின் தென் ஆப்பிரிக்கப் போராட்டத்தை ஆதரித்து பாரதியார் தமது பத்திரிகையில் எழுதினரே! கார்ட்டுன் வெளியிட்டாரே! அதையrவது கூறியிருக்கலாமே! து தி து க் கு டி சுதேசிக்கப்பல் போராட்டத்தை ஆதரித்து நாள் தவருது எழுதினரே! கப்பலோட்டிய தமிழர் சிதம்பரத்துடனும்-சி வ த் து ட னு ம்-தோள் கொடுத்துப் போராடினரே! அதையாவது காந்தியிடம் சொல்லியிருக்கலாமே! இந்தப் பெரிய மனிதர்கள் அந்த நேரத்திலே வாய் மூடி நின்ருர்களே! அது ஏன்? காரணம் என்ன? காரணம் ஒன்றே. பாரதி மாபெரும் தேசபக்தர் என்று காந்தியிடம் சொல்லிக் கொண்டாட மனம் இல்லை; நா எழவில்லை. துணி வெளுக்க மண்ணுண்டு -எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரி தோல் வெளுக்கச் சாம்பருண்டு -எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரி