பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 ஆங்கிலேயருக்குச் சாதகமாக நின்றது; ஆங்கிலேயரின் நண்பனாக நின்று அவருக்கு உதவியது. இந்தப் போரிலே வீரபாண்டிய கட்டப்பொம்மன் வீழ்ந்தான். பின்னே பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை இடித்துத் தரைமட்டமாக்கி, அந்த மண்ணிலே கள்ளி பயிரிட்டான் ஆங்கிலக் கம்பெனிக்காரன்.

  • பாஞ்சாலங்குறிச்சி பாளையப்பட்டு 104 கிராமங்கள் கொண்டது. அவற்றில் 79 கிராமங்களை எட்டயபுரம் பாளையப்பட்டுக்கு இனமாக வழங்கினன் வெள்ளையன். எதற்காக? பாஞ்சாலங்குறிச்சிச் சண்டையிலே வெள்ளை யருக்கு சாதகமாக உதவியதற்காக.

பின்னே பாளையப்பட்டுகள் யாவும் ஒழிக்கப் பட்டன. எட்டயபுரம் பாளையப்பட்டும் ஒழிக்கப்பட்டது. 1803 ம் ஆண்டிலே எட்டயபுரம் ஜமீளுயிற்று. ஆயினும் எட்டயபுரம் குடிமக்கள் அந்த ஜமீந்தாரை சமகாராஜா என்றே அழைத்து வந்தார்கள். எட்டயபுரம் குடிமக்கள் மிகவும் மரியாதையுடையவர்கள். எட்டு: என்ற எண்ணை நாவிலுைம் சொல்லமாட்டார்கள். நெல் அளப்பார்கள். ஒன்று. இரண்டு மூன்று என்று சொல்லிக் கொண்டே வருவார்கள். ஏழுவரை சொல் வார்கள். ஏழுக்குப் பின் எட்டு அல்லவா அதைச் சொல்லமாட்டார்கள். 'மகாராஜா என்பார்கள். தேங்காய் எண்ணிப் போடுவார்கள். ஒன்று. இரண்டு மூன்று என்று எண்ணுவார்கள். ஏழு முடிந்தவுடனே சமகாராஜா' என்பார்கள். அதாவது எட்டு என்று பொருள்.

  • திருநெல்வேலி ஜில்லா கெஜட்டியர்