பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 தோள்பட்டையில் ஒரு பின் இடது தோள் பட்டையில் ஒரு பின்'. தாம் ஒர் இராணுவ வீரர் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. அதாவது இந்திய விடுதலைப் போர் வீரர் என்ற எண்ணம். ஒரு நாள் காலை நேரம். நண்பர் ஒருவர் பாரதியைப் பார்க்க வந்தார். அவர் பெயர் நடேசய்யர். கதேசமித் திரன்’ பத்திரிகையிலே உதவி ஆசிரியர் வேலை பார்த்து வந்தார். பாரதியார் திருவல்லிக்கேணியிலே குடியிருந்த வீட்டில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பாரதியாரின் மனைவியார் வந்தார். "இந்த மாதிரி பின்னக் குத்திக் கோட்டை நாச மாக்கலாமா? எத்தனை முறை சொன்னலும் கேட்க மாட் டேன் என்கிறீர்களே!" என்று சொல்லிக் கொண்டே வந்து பின்னே எறிந்து விட்டுப் போனர். பாரதியாரின் முகம் வாடியது. பாப்பாவை அழைத் தார். பாப்பா வந்தது. 'அந்த சட்டையைத் துவைக்க வேண்டாம் என்று அம்மாவிடம் சொல்லு' என்ருர். அப்போதும் அவர் மனம் அமைதி பெறவில்லை. 'தம்பீ! சிறிது நேரம் இங்கேயே இரு. இதோ வந்து விடுகிறேன்’ என்ருர். பக்கத்து அறைக்குள் சென்ருt. சிறு குழந்தை போல் விம்மி விம்மி அழுதார். சிறிது நேரம் அழுதபின் கண்களைத் துடைத்துக் கொண்டு வந்தார். 'தம்பீ! குடும்பம் நடத்துவது சுலபமன்று. ரொம்ப சிரமம்" என்ருர், - கூறியவர் : நடேசய்யர்