பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 திருவல்லிக்கேணியில் இருந்தபோது நாள்தோறும் பார்த்தசாரதி கோவிலுக்குச் செல்வார் பாரதியார்: பார்த்தசாரதியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வருவார். வாசலில் யானை இருக்கும். அதைப் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நிற்பார். அதற்குப் பழம் கொடுப் பார். இது வழக்கம். இந்த வழக்கப்படி அன்றும் சென்ருர்: பார்த்த சாரதியை தரிசனம் செய்தார்; வெளியே வந்தார்; கோயில் யானையிடம் சென்ருர். யானைக்கு மதம் பிடித்திருந்தது. அதேைலயே அந்த யானையைச் சுற்றி இரும்பு வேலி அடைத்திருந்தார்கள். யானையின் கால்களை இரும்புச் சங்கிலி கொண்டு பிணைத்திருந்தார்கள். யானையிடம் பாரதி செல்வது கண்டான் யானைப் பாகன்; அவரைத் தடுத்தான். அவர் நிற்கவில்லை. யானே யிடம் சென்ருர். வாழைப்பழம் கொடுத்தார். யானை என்ன செய்தது? தனது துதிக்கையால் அவரைத் தள்ளிவிட்டது. காற்று ஊதினாலும் கீழே விழுந்துவிடக் கூடிய பாரதியின் உடல், யானையின் வலி முன் எம்மாத்திரம்? யானையின் காலடியில் விழுந்து விட்டார் பாரதியார். உடம்பு முழு வதும் காயம். ரத்தம் வந்துவிட்டது. அவ்வளவுதான். பெருங்கூட்டம் கூடி விட்டது. எவரும் யானை அருகில் செல்லத் துணியவில்லை. பாரதியைத் தூக்கவில்லை. ஓடி வந்தார் குவளைக் கண்ணன். தாவிக் குதித்தார். பாரதியைத் தூக்கினர். வெளியே நீட்டினர். அப்போது மற்றவர்கள் உதவினர்கள். செய்தி கேட்டார் மண்டயம் பரீநிவாசாச்சாரியார். ஓடி வந்தார். ஒரு கார் ஏற்பாடு