பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 செய்து கொண்டு ராயப்பேட்டை மருத்துவ நிலையத் துக்குக் கொண்டு போளுர், நண்பர்கள் உடன் சென்ருர் கள். காயத்துக்கு மருந்து போடப்பட்டது. வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள். காயங்கள் ஆறிவிட்டன. ஆனால், அவரது உடல்நிலை மோசமாகியது. வயிற்றுக்கடுப்பு அவரைப் பற்றிக் கொண்டது; வாட்டியது. இது நண்பர்களுக்கு அறிவிக்கப் படவில்லை. பாரதியார் நோய்வாய்ப்பட்ட செய்தி அறிந்தார் நெல்லையப்பர் ஒடி வந்தார். ஒரு டாக்டரை அழைத் தார். டாக்டரும் வந்தார்; நோய்க்கு மருந்து கொடுத் தார். ஆளுல், பாரதியோ! மருந்து உட்கொள்ள மறுத்து விட்டார். எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்கவில்லை. பிடிவாதமாக் இருந்துவிட்டார் பாரதி. முகவாட்டத் துடன் திரும்பிச் சென்றுவிட்டார் டாக்டர். பாரதியின் அருகிலேயே இருந்தார் நெல்லையப்பர். ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்து ஓராம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி இரவு மணி பன்னிரண்டு. சிறிது நேரத்திற்கு ஒருமுறை எழுந்திருப்பதும் படுப்பது மாக இருந்தார் பாரதியார். காலா! என் காலருகே வாடா!' என்று பாடிய பாரதி காலனுடன் போராடிக்கொண்டிருந்தார். ಹT6ು. வந்தான்; அவர் உயிரைக் கவர்ந்து சென்ருன். "மரணமில்லை; மரணமில்லை" என்று முழங்கிய பாரதி மரணம் அடைந்தார். 13