பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 செப்டம்பர் பன்னிரண்டாம் தேதி. பொழுது விடிந்தது. பாரதி இறந்த செய்தி நண்பர்களுக்கு அறி. விக்கப்பட்டது. ஹரிஹர சர்மா வந்தார்: மண்டயம் ரீநிவாசாச் சாரியார் வந்தார்; கரேந்திரநாத் ஆர்யா வந்தார்; வக்கீல் எஸ். துரைசாமி அய்யர் வந்தார்; சர்க்கரைச் செட்டியார் வந்தார். எப்போதும் பாரதிக்கு உதவிவந்த எஸ். துரைசாமி அய்யரே இப்போதும் உதவினர். பாரதியின் உடலை மயானத்துக்குக் கொண்டு சென்ருர்கள். ஹரிஹர சர்மாவே பாரதிக்கு ஈமக்கடன் செய்தார். சிறு சொற்பொழிவு நிகழ்ந்தது. பிறகு பாரதி பாடல்கள் பாடப்பட்டன. பாரதியார் பூத உடல் நீத்தார்: புகழ் உடல் பெற்ருர்.