பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 இந்தப் பணத்தை மூலதனமாகக் கொண்டு பாரதி ஆசிரமம் தொடங்கப்பட்டது. பாரதியின் மனைவி செல்லம்மாளும், செல்லம்மா அவர்களின் சகோதரர் அப்பாத்துரையும் இம் முயற்சியை மேற்கொண்டனர். திருவல்லிக்கேணி பெரிய தெருவில் பாரதி ஆசிரமம் இருந்தது. 1922-ம் ஆண்டுக்குள் சில புத்தகங்களே வெளி வந்தன. அதன்பின் வெளி வரவில்லை. புத்தக விற்பனை சுமாராகவே இருந்தது. உற்சாகம் அளிப்பதாக இல்லை. அவ்விதம் இருந்தபோது மேற்கொண்டு புத்தகங்கள் எப்படி வெளிவரும்? வரவில்லை. 1923க்குள் புத்தக விற்பனையும் சுருங்கியது. வெளியீடும் நின்றது. வெளி வந்த புத்தகங்கள் விற்பனையாகாமல் தேங்கி இருந்தன. பாரதி நூல்கள் வெளியிடும் உரிமையை எவருக்காவது விற்று விடலாம் என்று எண்ணினர். ஆனால், அதிக விலை கொடுக்க எவரும் முன் வந்தாரிலர். முன் வந்தவர் சிலரும் பணம் என்ற பேச்சு வந்தபோது பின்வாங்கினர். சிறிது சிறிதாகப் பல தவணைகளில் கொடுப்பதாகக் கூறினர். இவையெல்லாம் பாரதி குடும்ப சம்ரக்ஷணைக்கு உதவுமா? போதுமா? எனவே, புத்தகங்களை எல்லாம் ஹரிஹர சர்மாவின் பொறுப்பில் ஒப்புவித்தார்கள். புத்தகங்களை விற்க வேண்டும். விற்பனைமூலம் கிடைக்கும் பணத்திலிருந்து குறிப்பிட்டதொரு தொகையை பாரதி குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு புத்தகங்களை ஹரிஹர சர்மாவிடம் ஒப்புவித்தார் கள். 1924-ம் ஆண்டிலே இது நடந்தது. அந்த ஆண்டிலேயே பாரதியாரின் மகள் சகுந்தலா வுக்குத் திருமணம் நிகழ்ந்தது. புத்தகங்களை ஈடுகாட்டி