பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 இரண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்தார் ஹரிஹர சர்மா, அதே ஆண்டில் சகுந்தலாவின் கணவர், பாரதியாரின் தம்பி விகவநாதன், ஹரிஹர சமோ ஆகிய மூவரும் சேர்ந்து "பாரதி பிரசுராலயம்" என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். பாரதி நூல்களை வெளியிடும் பணியை மேற்கொண்டது பாரதி பிரசுராலயம். பாரதி நூல்களின் உரிமை மட்டும் பாரதி குடும்பத்தினரிடமே இருந்தது. பாரதி நூல்கள் ஒன்றன் பின் ஒன்முக வெளிவரத் தொடங்கின. இந்நிலையில் மற்ருேர் அடி விழுந்தது. 1928-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி பர்மா கவர்னர் ஒர் உத்திரவு பிறப்பித்தார். பாரதியாரின் தேசீய கீதங்கள் பர்மா எல்லையில் நுழையக்கூடாது என்றும், அந்தப் புத்தகங்களைப் பறிமுதல் செய்யவேண்டும் என்றும், அந்த உத்தரவு தெரிவித்தது. அப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது பர்மா. 1928-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதியிட்ட சென்னை அரசாங்க கெஜட்டில் இந்த உத்தரவு வெளி வந்தது. இவ்வாறு உத்தரவு வந்த உடனே சென்னை போலீசார் என்ன செய்தனர்? திருவல்லிக்கேணியில் இருந்த பாரதி பிரசுராலயத்தையும், பாரதி நூல்கள் அச்சுப் போடப்பட்ட ஹிந்தி பிரச்சார் அச்சகத்தையும் சோதனை செய்தனர்; புத்தகங்களை எடுத்துச் சென்றனர். இதனை ஆட்சேபித்து பாரதி பிரசுராலயத்தினர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அப்போது சென்னை மாகாணத்தில் ஜஸ்டிஸ் கட்சி மந்திரிசபை பதவி வகித்தது. டாக்டர் சுப்பராயன் கல்வி மந்திரியாக இருந்தார்.