பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பாரதி பாடல்களுக்கு அரசாங்கம் தடை விதித்ததைக் கண்டித்துச் சட்டசபையில் பேசினர் சத்தியமூர்த்தி. பாரதி பாடல்களில் அரசாங்க துவேஷம் எதுவுமில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்மீது, பறிமுதல் செய்த புத்தகங்களை அரசாங்கம் திருப்பிக் கொடுத்தது. இது, நல்லதொரு விளம்பரம் ஆயிற்று. “சர்க்காரால் பறிமுதல் செய்யப்பட்டுத் திருப்பித்தரப்பட்டது என்று எழுதி ரப்பர்.ஸ்டாம்பு செய்து, அதைப் பாரதி புத்தகங் களின் மேல் முத்திரை போட்டு விற்பனை செய்தது பாரதி பிரசுராலயம். ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தி ஒன்றில் பாரதி பாடல் உரிமையை செல்லம்மா பாரதியிடமிருந்து வாங்கிக் கொண்டது பாரதி பிரசுராலயம். அதற்காக ரூபாய் நாலாயிரம் பெற்றுக்கொள்ளச் சம்மதித்தார் செல்லம்மா பாரதி. அதில் சகுந்தலாவின் கலியாணத்தின் பொருட்டு வாங்கிய கடன் ரூபாய் இரண்டாயிரத்தையும் கொடுத்து விட்டு, மீதியுள்ள பணத்தைச் செல்லம்மா பாரதியிடம் கொடுப்பதென்று முடிவு செய்யப்பட்டது. அவ்விதமே கொடுக்கப்பட்டது. - பாரதி பாடல்களை ஒலிப்பதிவு செய்யும் உரிமையை ரூ400க்கு ஏ. வி. எம். செட்டியார் வாங்கினர். 1938-ம் ஆண்டில் சகுந்தலாவின் கணவர் பாரதி பிரசுராலயத்தினின்றும் விலகிக் கொண்டார். 1941-ம் ஆண்டில் ஹரிஹர சர்மாவும் பாரதி பிரசுராலயத்தினின்று விலகினர். ஆக, பாரதியாரின் தம்பி விசுவநாதன் ஒருவரே பாரதி பிரசுராலய உரிமையாளராக இருந்தார். இந்நிலையில் பாரதிநூல்களை நாட்டுடைமையாக்குதல் வேண்டும் என்ற எண்ணம் பலரிடையே தோன்றலாயிற்று,