பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடலின் பின்னே சுயராஜ்யமே நமது லட்சியம். அதாவது, இந்தியாவை இந்தியர்களே ஆள்வது. இவ்வாறு கூறினர் தாதாபாய் கல்கத்தா காங்கிரசிலே. "சுயராஜ்யம் எனது பிறப்புரிமை' என்று முழங்கினர் திலகர். ஆனல் வெள்ளையர் என்ன செய்தனர்? நம்மைக் கேலி செய்தனர். "உங்களிடையே பல மதங்கள் உள்ளன. பல மொழி கள் உள்ளன. பல ஜாதிகள் உள்ளன. நீங்கள் எப்படி ஓரினமாவீர்கள்? நீங்கள் எப்படி ஒன்று சேருவிர்கள்? உங்களுக்கு ஜாதீய ஞானம் ஏது? எப்படி ஏற்படும்? ஏற்படாது. ஆகவே, நீங்கள் சுயராஜ்யம் பெறத் தகுதி யற்றவர்கள்' என்ருர்கள். வெள்ளையர் மட்டுமா இவ்வாறு கூறினர்? இல்லை இந்தியரில் சிலரும் கூறினர். இந்தியாவின் எதிரிகள் இவ்வாறு கூறியதை எதிர்த்து முறியடிக்க வேண்டிய பொறுப்பு திலகர் கட்சியினருக்கு ஏற்பட்டது. அந்தப் பொறுப்பை நி ைற வே ற் ற முற்பட்டார் பாரதியார்.